நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 26 அக்டோபர், 2011

முஸ்லிம் பள்ளி சிறுவர்கள் மீது போலி FIR


 குர் ஆனை காவல்துறையினர் அவமதித்ததை கண்டித்து காவல்துறைக்கும் மோராதாபாட்தில் உள்ள  டின்கர்பூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டது இதில் மோராதாபாட் DIG க்கு காயம் ஏற்ப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் டின்கார்பூர், அக்சலாட் நகர் பாகா மற்றும் மைனதர் மக்கள் மீது பல்வேறு போலி வழக்குகள் பதிவு செய்து அவர்களை கைதுசெய்தனர்.இந்த கைது நடவடிக்கையில் சில பள்ளி சிறுவர்களும் பலிகடவாக்கப்பட்டனர். அந்த சிறுவர்கள் மீது கொலைமுயற்சி உட்பட IPC யின் பல பிரிவின் படி  வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
 
   



உண்மையில் அந்த சிறுவர்கள் குற்றவாளிகளா?

மோதல் நடந்த நடந்த நாளன்று அந்த சிறுவர்கள் பள்ளிக்கூடத்தில் இருந்தார்கள் என்பதன் சான்று TCN வைத்துள்ளது. மேலும் அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் கூறுகின்றனர் "எங்கள குழந்தைகள் மீது காவல்துறை பொய்யான வழக்குகளை பதிவு செய்துள்ளது, இந்த மோதல் சம்பவத்தை பெரியதாக காட்டுவதற்காக எங்கள பிள்ளைகளை வைத்து ஒரு பொய்யான கதையை காவல்துறை கட்டவிழ்த்துள்ளது ".

ரசூல் சலாம் ஒரு பால் வியாபாரி கூறுகையில் "எனது மகன் குலாமை காவல்துறையினர் மோராதாபாட் சிறையில் வைத்து பள்ளி சிறுவன் என்ற ஒரு இறக்கம் கூட இல்லாமல் அடித்து துன்புருத்துகின்றனர்.அவன் எந்த ஒரு தவறையும் புரியவில்லை. குலாம் மோராதாபாட்தில் சிரிஸ் என்னும் ஊரில் உள்ள Bahman பப்ளிக் பள்ளிகூடத்தில் 9 வகுப்பு படித்து வருகிறான். குலாமுடைய பள்ளி ரிப்போர்ட் கார்டிலும் அவன் எந்த ஒரு தவறான செயலிலும் ஈடுபடாது ஒழுக்கமுள்ள பய்யன் என்று பதிவாகியுள்ளது.அவனுடைய பள்ளி வருகை பதிவிலும் அவன் 210 நாட்களில் 189 நாட்கள் பள்ளி சென்றுள்ளான். மேலும் சம்பவம் நடந்த நாளன்று குலாம் பள்ளியில் தான் இருந்தான் என்று சான்றும் இருக்கிறது. ஆனால் இந்த காவல்துறையின் கூற்றோ இதற்கு மாறாக உள்ளது. குலாம் மீது IPC  307, 147, 148, 149 போன்ற பிரிவுகளில் வழக்குகள் பதிவாகியுள்ளன. போலீஸ் கூறும் தகவல்கள் முழுக்க முழுக்க பொய்யான தகவல்கள். நான் கடைசியாக எனது மகனை பள்ளி பேருந்தில் ஏற்றிவிடும் பொது பார்த்தது தான், அதன் பின் பார்க்க வில்லை அவன் கைதாகியுல்லன் என்ற செய்தி மட்டும் எனக்கு கிடைத்தது".

குலாம் ரசூல் மட்டுமல்ல அவனுடன் சேர்ந்து அருகில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவர்களான முகமது பிலால், முகமது அஹ்சான் மற்றும் பல முஸ்லிம் சிறுவர்களை காவல்துறை கைது செய்து துன்புறுத்தி வருகின்றது. மைனதர் பகுதி மக்கள் சிலர் கூறுகையில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் நடந்த மோதல் வேறு பகுதியில் 11.30 முதல் 12.30 வரை நடந்தது. அனால் இந்த சிறுவர்கள் மதியம் 1.30 மணியளவில் தான் உணவு உன்ன வீட்டிற்கு வந்தனர்.

இன்னும் ஒரு முக்கியாம விஷயம் என்னவென்றால் அப்படியே இந்த சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றால் Juvenile Justice Act கீழே தான் பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்கள் பயின்ற பள்ளியின் சான்றின் படி அந்த சிறுவர்களின் வயது 18 க்கு கீழே உள்ளது.ஆனால் காவல்துறையோ அந்த சிறுவர்கள் 18 வயதிற்கு மேலே தான் உள்ளார்கள் எங்களிடம் மருத்துவ சான்றிதல் இருக்கின்றது என்று அந்த சிறுவர்களை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகின்றனர். அந்த மருத்துவ சான்றிதளை அந்த சிறுவர்களின் பெற்றோகள் கேட்கையில் காவல்துறையினர் மலுப்புகின்றனர். தற்போது அந்த மருத்துவ சான்றிதளை RTI Act மூலம் பெற அந்த சிறுவனின் பெற்றோர்கள் முயற்சி எடுத்துள்ளனர்.

மோராதாபாட் மட்டுமல்ல,இந்தியா முழுவது ஒரு நாளுக்கு ஒரு வன்முறை என்ற கணக்கில் இன்று முஸ்லிம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சங்பரிவார RSS குண்டர்களால் பலியாகி வருகின்றனர். இதனை பற்றிய ஆதாரங்கள் இருந்த போதிலும் ஆளும் கட்சியும், நிதிமன்றங்களும் முஸ்லிம்களை புறக்கணித்து வருகின்றது. இன்று முதல் முஸ்லிம்களை ஒரு ஊட்டு வங்கியாக மட்டும் பயன்படுத்தி வருகின்றனர் இந்த ஆட்சியாளர்கள். குஜராத் இனப்படுகளை குறித்த நேரடி விடியோ வாக்குமுலம் இருந்த போதிலும் இன்று வரை யாரும் தண்டிக்கப்பட வில்லை. என்று மாறும் இந்த நிலை என்று தெரியவில்லை. இன்னும் முஸ்லிம் சமுகம் உறங்கிக்கொண்டுதான் இருக்கின்றது.