The Real Fact is
மேலும் அவர் கூறுகையில் "ஒட்டுமொத்த திட்டத்தின் ஒரு பகுதியாக, முதலில் யோகா குரு பாபா ராம்தேவ், பின்னர் அன்னா ஹசாரேயை பயன்படுத்தினர் . தற்பொழுது ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரை பயன்படுத்தி ஊழலுக்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.
"அவர்கள் சங்கப்பரிவாரத்தின் தீவிரவாத கும்பல் நடத்திய தாக்குதல்களை மக்களின் கவனத்தில் இருந்து திசை திருப்ப இவ்வாறு முயற்சி செய்கின்றனர்." என்று அவர் கூறினார்.
திக் விஜய் சிங் அவர்கள் ஆன்மிக குருவை RSS சின் இந்த செயல்களை இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தினார்.
"இந்த தீவிரவாத செயல் புரிவோர்களுடன் துணை புக வேண்டாம் என ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கரை கேட்டுக்கொள்கிறேன்." என திக் விஜய் சிங் கூறினார்.
"மக்கள் அனைவரும் நிறைய கருத்துகள் தெரிவித்துள்ளனர் அவர்கள் அனைவரின் கருத்தையும் நான் கேட்க முடியாது. நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன், ஊழலுக்கு எதிராக எனது போராட்டத்தை தொடருவேன்" என ரவி சங்கர் கூறினார்.
மேலும் அவர் கூறும் போது "சட்டத்தினால் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது. ஒரு தார்மீக மற்றும் ஆன்மீகம் அலையை உருவாக்க வேண்டும்".
திக்விஜய் சிங் கூறியதாவது "காங்கிரஸ் ஆட்சியின் போது ஊழலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது ஆனால் பாஜக ஆட்சியில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் நிறுவனத்தின் நிர்வாகிகள்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்".
"பாஜகா வின் ஆட்சி காலத்தில் ஊழல் செய்த பாஜகாவின் பங்காரு லச்மன் மற்றும் ஜெயா ஜெயிட்லி மீது என் அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை" என திக் விஜய் சிங் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பிஜேபி மூத்த தலைவர் ரவி சங்கர் கூறுகையில் ".திக்விஜய் சிங் அவர்கள் தன்னிச்சையாக கருத்துகளை தெரிவித்து காங்கிரசின் புகளை அளித்து வருகின்றார். நாட்டின் கருப்பு பணம் மற்றும் ஊழலால் மக்கள் கோபத்தில் உள்ளனர். ஊழலுக்கு எதிராக பேசும் யாராக, பாபா ராம்தேவ் அல்லது அண்ணா ஹசாரா அல்லது சிவில் சமூகம் போன்ற யாராக இருந்தாலும்,அவர்களுக்கு எதிராக திக்விஜய் அவர்கள் பொய் விஷயங்கள் கூறுகின்றார்," அவர் கூறினார்.
நமது நாட்டில் மிகப்பெரும் ஊழல்களான சவப்பெட்டி ஊழல் நாட்டின் ராணுவ வீரர்களை அவமானப்பதியது பாஜக. ஆனால் இவர்கள் இன்று ஊழலுக்கு எதிராக களம் இறக்கயுள்ளது என்பது சாத்தான் வேதம் ஓதுகின்றது என கூறலாம்.