நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

இனப்படுகொலையில் மோடிக்கு தொடர்பு:அமிக்கஸ் க்யூரி


setback_modi_271x181


புதுடெல்லி : 2002-ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையில் மோடியின் பங்கை தெளிவாக விவரிக்கிறது ஸாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமிக்கஸ் க்யூரி(ஒரு குறிப்பிட்ட வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுபவர்) ராஜு ராமச்சந்திரனின் அறிக்கை.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழுவின் விசாரணை முடிவுகளுடன் மாறுபட்டு கொல்லப்பட்ட இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி மற்றும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோரின் குற்றச்சாட்டுக்களை உறுதிச்செய்யும் அமிக்கஸ் க்யூரியின் அறிக்கை மோடியை குஜராத் இனப்படுகொலை வழக்கில் குற்றவாளி சேர்ப்பது உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளுக்கு வழிவகைச்செய்யும் என கருதப்படுகிறது.ஒரு தேசியபத்திரிகை இதுத்தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அமிக்கஸ் க்யூரி அறிக்கை தற்பொழுது உச்சநீதிமன்றத்தால் ரகசியமாக பாதுகாக்கப்படும் ஆவணமாகும்.

கோத்ரா சம்பவத்திற்கு பிறகு 2002 பெப்ருவரி 27-ஆம் தேதி முதல்வர மோடி அழைத்த உயர் அதிகாரிகளின் ரகசிய கூட்டத்தில் முஸ்லிம்களை கூட்டுப்படுகொலை செய்ய ஹிந்துக்களை அனுமதிக்கவேண்டும் என மோடி உத்தரவிட்டதாக சஞ்சீவ் பட் மற்றும் ஸாக்கியா ஜாஃப்ரியின் குற்றச்சாட்டுக்களை அமிக்கஸ் க்யூரி அறிக்கை உறுதிச்செய்கிறது. இந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் கண்டறிய இயலவில்லை என்ற சிறப்பு புலனாய்வுக்குழுவின் அறிக்கையுடன் மாறுபடுகிறது அமிக்கஸ் க்யூரியின் அறிக்கை.குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடியின் பங்கினைக்குறித்து சஞ்சீவ் பட் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் குறுக்கு விசாரணையில் அளித்த வாக்குமூலம்தான் மோடிக்கு எதிரான ஆதாரம் என ராஜு ராமச்சந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.

அமிக்கஸ் க்யூரி அறிக்கையை விசாரணை நீதிமன்றம் அங்கீகரித்தால் இந்திய தண்டனைச்சட்டம் 153A(மத பிரிவினர்களிடையே வெறுப்பை உருவாக்குதல்), 153B(தேசிய ஐக்கியத்தை கெடுக்கும் வகையிலான அறிக்கையை வெளியிடுதல்), 166(பொது நல ஊழியர் சட்டத்திற்கு விரோதமாக பிறருக்கு காயமேற்படுத்தும் செயலில் ஈடுபடுதல்) ஆகிய பிரிவுகளில் மோடியின் மீது வழக்கை பதிவுச்செய்ய முடியும்.

166-ஆம் பிரிவின்படி ஒரு பொதுநல ஊழியர் இன்னொரு பிரிவினருக்கு காயமேற்படுத்த உதவும் விதமாக உத்தரவுகளை பிறப்பித்தால் அது ஒருவருடம் வரை தண்டனை அனுபவிப்பதற்கான குற்றமாகும். கலவரத்தை கட்டுப்படுத்த மோடிக்கு விருப்பமில்லாமல் இருந்தது என அமிக்கஸ் க்யூரி அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

முஸ்லிம் இனப்படுகொலையில் மோடி உள்ளிட்ட 62 உயர் தலைவர்களின் பங்கினைக்குறித்து விசாரணை நடத்தவேண்டுமென உச்சநீதிமன்றத்தில் ஸாக்கியா ஜாஃப்ரி வழக்கு தொடர்ந்ததையடுத்து இனப்படுகொலையில் மோடியின் பங்கினைக்குறித்து வழக்கு உருவானது. கொல்லப்படுவதற்கு முன்பு இஹ்ஸான் ஜாஃப்ரி மோடியை ஃபோனில் அழைத்து உதவி கோரியதாகவும் ஆனால் மோடி ஜாஃப்ரியை மோசமாக திட்டியதாகவும் ஸாக்கியா குற்றம் சாட்டியிருந்தார்.

இத்துடன் சேர்த்துதான் கோத்ரா சம்பவம் நடந்த அன்றைய இரவு மோடி அழைத்த ரகசிய கூட்டத்தைக் குறித்தும் விமர்சிக்கிறார். இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே.ராகவனின் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்து உத்தரவிட்டது. மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உண்மை என்றாலும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என சிறப்பு புலனாய்வு குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது.

இதற்கிடையே சஞ்சீவ் பட் இதற்கான ஆதாரங்களை வழங்கியபோதிலும் சிறப்பு புலனாய்வுக்குழு அதனை பரிசீலிக்கவில்லை.பட்டின் குற்றச்சாட்டுக்கள் சாட்சி இல்லை எனவும் அது சர்ச்சையை கிளப்புவதை நோக்கமாக கொண்டது எனவும் சிறப்பு புலனாய்வுக்குழு கூறியது.இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றம் இவ்விவகாரத்தில் முடிவு எடுக்க விசாரணை நீதிமன்றத்திடம் உத்தரவிட்டது.

மோடியின் மீதான வழக்கை முடிவுக்கு கொண்டுவர சிறப்பு புலனாய்வு குழு எழுப்பிய நியாயங்கள் ஆபத்தானதும், தவறான அனுமானமுமாகும் என அமிக்கஸ் க்யூரி ராஜு ராமச்சந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.ரகசிய கூட்டத்தில் மோடி உத்தரவிட்டது குறித்து சஞ்சீவ் பட் பொய் கூறியிருந்தால் அவ்வாறு நிகழவில்லை என பிற அதிகாரிகள் கூறுவதும் பொய்யாக இருக்கக்கூடாதா? என அமிக்கஸ் க்யூரி அறிக்கை கேள்வி எழுப்புகிறது.