திண்டுக்கல்: தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது திண்டுக்கல் மாவட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டதில் எஸ்.டி.பி.ஐ கட்சியினரைச் சேர்ந்த 3 நபர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின்படி பிரச்சாரம் முடிவடைந்த நாளிலிருந்து வாக்குப்பதிவு நடைபெறு நாள் வரை யாரும் எந்தவிதமான பிரச்சாரத்திலும் ஈடுபடக்கூடாது என்பது விதிமுறையாகும். ஆனால் இந்த விதிமுறையை மீறி வாக்குப்பதிவு நடக்கும் இடத்தில் (வார்டு எண் 40 மற்றும் 41) இருந்து கொண்டு வாக்களிக்க வருபவர்களிடம் தங்கள் கட்சிக்கு ஓட்டுபோடுமாறு ம.ம.கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.டி..பி.ஐ கட்சியின் ஷர்ஃபுதீன் அவர்களை நோக்கி எவ்வளவோ எடுத்துக்கூறியும் ம.ம.கவினர் அதனை பொருட்படுத்தாது தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தனர்.
வாக்குவாதம் இறுதியில் கைகலப்பாக மாறியது. இறுதியில் ம.ம.கட்சியைச்சேர்ந்த 60 நபர்கள் ஒன்று கூடி ஷர்ஃபுதீனை இரும்பு கம்பிகளைக்கொண்டு கடுமையாக தாக்கினர்.இதனை தடுக்க வந்த ஹுஸைன் மெளலானா மற்றும் இபுராஹீமும் தாக்குதலுக்கு இலக்காணார்கள்.
தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட மூவரும் உடனடியாக திண்டுக்கள் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஷர்ஃபூதீன் படுகாயமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களை மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்