கடந்த வெள்ளிக்கிழமையன்று கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி நிகழ்த்திய குத்பா உரையில் ‘இஸ்லாமிய ஜனநாயக குடியரசு ஒன்றை எகிப்து, லிபியா, துனீஸியா உள்ளிட்ட நாடுகளின் புரட்சியாளர்கள் நிறுவ வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளார்.
அரபு முஸ்லிம் நாடுகளில் முதல் மக்கள் எழுச்சி கண்ட நாடான துனீஸியாவில் முதல் தேர்தல் இடம்பெற்றுள்ளது அந்த தேர்தலில் அதில் எதிர்பார்த்ததையும் விடவும் கூடிய ஆதரவை அந்நஹ்ழா என்ற இஸ்லாமிய அரசியல் கட்சி பெற்றுள்ளது.
217 உறுப்பினர்களை கொண்ட சட்டவாக்க சபையில் 90 உறுப்பினர்கள் அந்நஹ்ழா கைப்பற்றியுள்ளது. இதேவேளை லிபியாவின் இடைக்கால நிர்வாகம் லிபியா ஒரு இஸ்லாமிய நாடாக விளங்கும் என்று அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நவம்பர் மாதம் நடைபெரபோகும் எகிப்தின் பொதுத் தேர்தலில் இஸ்லாமிய சக்திகள் அதிகூடிய ஆசனங்களை கைப்பற்றும் என்று ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி ‘இஸ்லாமிய ஜனநாயக குடியரசு ஒன்றை எகிப்து, லிபியா, துனீஸியா உள்ளிட்ட நாடுகளின் புரட்சியாளர்கள் நிறுவ வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளார்.
அரபு முஸ்லிம் நாடுகளின் மக்கள் எழுச்சி இஸ்லாமிய எழுச்சி என்பதை இஸ்லாத்தை நோக்கி மக்கள் வெள்ளமாக வருவது காட்டுவதாக மேற்குலக ஆய்வாளர்களே கூறத் தொடங்கியுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்னர் துனீஸியாவில் மக்கள் கிலாபத் வேண்டுமென்ற கோசத்துடன் பேரணியாக திரண்டு பேரணியொன்று நடத்தியுள்ளனர், அதுதொடர்பான வீடியோ பதிவு மக்கள் மிக பிரமாண்ட பேரணிசென்றதை காட்டுகின்றது.