அஹ்மதாபாத் : சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு எதிரான வழக்கில் முக்கிய சாட்சியை காணவில்லை. ஷரணிக் ஷா என்பவர் தாம் காணாமல் போயுள்ளார். கடந்த செவ்வாய் கிழமை முதல் ஷாவை காணவில்லை என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். தீபாவளி கொண்டாட்டங்களுக்காக ஷா காந்தி நகர் சென்றதாக கருதியதாகவும், இரவு வரை திரும்பாததால் புகார் அளித்துள்ளதாகவும் போலீஸ் கூறுகிறது.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு எதிராக தன்னை பொய் வாக்கு மூலம் அளிக்க நிர்பந்தித்தார் என சஞ்சீவ் பட்டின் மீது கெ.டி.பாந்த் என்ற போலீஸ்காரர் தொடர்ந்த வழக்கில் ஷா முக்கிய சாட்சியாவார்.
ஜூன் 16-ஆம் தேதி பட்டின் வீட்டிற்கு வந்த கே.டி.பாந்துடன் ஷாவும் உடனிருந்தார். சாட்சி என்ற நிலையில் ஷாவின் வாக்குமூலத்தை மாஜிஸ்ட்ரேட் பதிவு செய்திருந்தார். குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடிக்கு பங்கிருப்பதாக சஞ்சீவ் பட் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் கூறியிருந்தார்.