நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 29 அக்டோபர், 2011

வகுப்புவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளுக்கு பாப்புலர் ப்ரண்ட் கோரிக்கை


pfi
புதுடெல்லி: இந்தியாவில் அதிகரித்துவரும் வகுப்புவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், முஸ்லிம்கள் மற்றும் இதர மத சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய-மாநில அரசுகளுக்கு டெல்லியில் நடந்த பாப்புலர் ப்ரண்டின் தேசிய நிர்வாக குழு கோரிக்கை விடுத்துள்ளது.
உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், உத்தராகாண்ட், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில மாதங்களில் முஸ்லிம்களுக்கு மீது நடத்தப்பட்ட வகுப்புவாத தாக்குதல்கள் குறித்த செய்திகளை பாப்புலர் ப்ரண்ட் சுட்டிக்காட்டியுள்ளது. சில மாநிலங்களில் புனித திருக்குர்ஆனை அவமதித்த சம்பவமும் நடந்தேறியுள்ளது. பெரும்பாலான சம்பவங்களில் போலீஸ் காழ்ப்புணர்வுடன் கலவரக்காரர்களுடன் இணைந்து செயல்பட்ட சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.

அடுத்து வரவிருக்கும் மக்களவை தேர்தலை கருத்தில்கொண்டு பாசிச சக்திகள் நாட்டில் வகுப்புவாத பிரிவினைகளை உருவாக்கும் முயற்சி என கருதுவதற்கு நியாயங்கள் உள்ளன. ஊழல் ஒழிப்பு போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஊடுருவல், அத்வானியின் ரதயாத்திரை, நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் ஆகியன இந்த அரசியல் விளையாட்டின் ஒரு பகுதியாகும்.

வகுப்புவாத சக்திகளின் உணர்ச்சியை தூண்டும் செயல்பாடுகளுக்கு பலியாகாமல் மனித உரிமைக்கும், சமூகநீதிக்கும் ஜனநாயக வழிகளில் சக்திப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட சிறுபான்மை மக்களுக்கு பாப்புலர் ப்ரண்டின் நிர்வாக குழு கூட்டம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் நடந்த 16 குண்டு வெடிப்புகளில் ஹிந்துத்துவ சக்திகளின் பங்கிருப்பது குறித்து வெளியான செய்தி குறித்து நிர்வாக குழு கவலை தெரிவித்துள்ளது.

நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா சக்திகளின் பங்கு வெளியான பிறகும் அவர்கள் எழுப்பும் அச்சுறுத்தலை மத்திய-மாநில அரசுகள் சிறியதாக காண்பிக்கின்றன. சங்க்பரிவார அமைப்புகள் மீது நாட்டின் உளவுத்துறை ஏஜன்சிகள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரமாகும் இது. தற்பொழுதும் குண்டுவெடிப்பு வழக்குகளில் விசாரணையின் பெயரால் முஸ்லிம்களை வேட்டையாடும் போக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
1992 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளை குறித்தும் அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு நிர்வாக குழு கோரிக்கை விடுத்துள்ளது. நவம்பர் 26,27 தேதிகளில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவிருக்கும் சமூகநீதி மாநாடு குறித்து நிர்வாக குழு விவாதித்தது.

இக்கூட்டத்தில் பாப்புலர் ப்ரண்டின் தேசிய தலைவர் இ.அப்துர் ரஹ்மான் தலைமை வகித்தார். பொது செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் அறிக்கையை தாக்கல் செய்தார். முஹம்மது அலி ஜின்னா, மெளலானா உஸ்மான் பெய்க், பேராசிரியர் பி.கோயா, முஹம்மது ஷஹாபுத்தீன், முஹம்மது காலித் ரஷாதி, யாமுஹிய்யத்தீன், வழக்கறிஞர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப், ஹாமித் முஹம்மது, இல்யாஸ் தும்பே, மெளலவி அஷ்ரஃப், ஒ.எம்.எ.ஸலாம், முஹம்மது ரோஷன்,  A.S இஸ்மாயீல் ஆகியோர்  கூட்டத்தில் பங்கேற்றனர்.