புதுடெல்லி : பெரும் சர்ச்சையை கிளப்பிய ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் மணிப்பூரில் விரைவில் வாபஸ்பெறப்படுகிறது. அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் நடந்த உயர்மட்டக்கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
மணிப்பூரில் மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளா பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்திவரும் உண்ணாவிரதப்போராட்டத்தின் மூலமாக இச்சட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.