நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

எஸ்.டி.பி.ஐ 300 இடங்களில் போட்டியிட்டு 56 இடங்களை கை பற்றியது



தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பெறும் பெறும் கட்சிகள் தனித்து களம் கண்ட வேலையில் எஸ்.டி.பி.ஐ சில இஸ்லாமிய இயக்கங்கள், தலித் கட்சிகள், கிறிஸ்தவ அமைப்புகளின் ஆதரவோடு உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தது. இதில் 56 இடங்களில் வெற்றியையும் பெற்றுள்ளது.

 கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் டெல்லியில் வைத்து தொடங்கப்பட்ட தேசிய அரசியல் இயக்கமான எஸ்.டி.பி.ஐ பல மாநிலங்களிலும் அடித்தளமிட்டு வருகிறது. தொடங்கப்பட்டு சில ஆண்டுகளிலேயே மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்டது. அதே போன்று சில மாதங்களுக்கு முன்னால் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட்டு 17 இடங்களில் வெற்றியை பெற்றது.

தமிழகத்திலும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் நன்கு அடித்தளமிட்டு வருகின்றனர். கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்தக்கட்சியுடனும் கூட்டணி சேராமால் தனித்து களம் கண்டது. தான் போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் எஸ்.டி.பி.ஐ யினர் கணிசமான வாக்குகளை பெற்றனர் .

தற்போது நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து வார்டு என மொத்தம் 300 இடங்களில் போட்டியிட்டது. இதில் 56 இடங்களில் வெற்றியை பெற்றுள்ளது. அதே போன்று இன்னும் பல பகுதிகளில் வெற்றி தோல்வியை மாற்றும் சக்தியாகவும் எஸ்.டி.பி.ஐ உருவெடுத்துள்ளது. சென்னையில் மாநகராட்சி மேயர் உட்பட மொத்தம் 21 இடங்களில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. ஆனால் சென்னை மண்ணடி 60வது வார்டில் போட்டியிட்ட அமீர் சுல்தான் மற்றும் 53 வார்டில் போட்டியிட்ட புஷ்பராஜ் ஆகியோரும் கணிசமான வாக்குகளை பெற்று திராவிட கட்சிகளின் தோல்விக்கு காரணமாயிருந்திருக்கிறார்கள்.

எஸ்.டி.பி.ஐயினர் பெற்ற வெற்றிகளின் விபரம் வருமாறு:-
கார்ப்பரேஷன் வார்டு - 2
முனிசிபாலிட்டி வார்டு - 2
டவுன் பஞ்சாயத்து வார்டு - 8
பஞ்சாயத்து வார்டு - 44

என மொத்தம் 62 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

சென்னை, ஈரோடு மாநகராட்சியில் SDPI ன் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கோவையில் ஐக்கிய ஜமாத் வேட்பாளருக்கு SDPI ஆதரவளித்தது. இதில் SDPI ஆதரவுடன் போட்டியிட்ட கோவை மேயர் வேட்பாளர் M.அமீர் அல்தாப் 36,471 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.அதேபோல் ஈரோட்டில் போட்டியிட்ட SDPIன் மேயர் வேட்பாளர் யூனுஸ் 4952 வாக்குகள் பெற்றுள்ளார். சென்னை மேயர் வேட்பாளர் அமீர் ஹம்சா 16,170 வாக்குகள் பெற்றுள்ளார்.

மாநகராட்சி மன்ற உறுப்பினர்களில் கோவையில் 82 வது வார்டில் போட்யிட்ட SDPI ன் வேட்பாளர் முகம்மது சலீம் வெற்றி பெற்றுள்ளார்.அதேபோல் நெல்லை மாநகராட்சியில் 36 வது வார்டு SDPI வேட்பாளர் மைதீன் பாத்திமா வெற்றி பெற்றுள்ளார்.

நகராட்சி வார்டுகள்:

கடையநல்லூர் நகராட்சியில் 29-வது வார்டில் நைனா முஹம்மது கனி.

செங்கோட்டை நகராட்சியில் 21-வார்டில் செய்யத் ஷாகுல் ஹமீத் பாதுஷா.

பேரூராட்சி வார்டுகள்:

திருநெல்வேலி பத்தமடை 4-வது வார்டு, புலாங்குடியிருப்பு 12-வது வார்டு, கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு 9, 13, 14, 15 வார்டுகள், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை 8-வது வார்டு மற்றும் 9-வது வார்டு

ஊராட்சியில் 33 உறுப்பினர்கள் SDPI சார்பாக போட்யிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல் 11 ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் SDPI வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முழு விவரம் கீழே கொடுக்க பட்டுள்ளது