நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 26 அக்டோபர், 2011

சட்டவிரோதமாக குடியிருப்புகளை கட்டுவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும்-இந்தியா

E-Ahmed291x21819634ஐ.நா : ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் சட்டவிரோதமாக குடியிருப்புக்கள் கட்டுவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும்.ஃபலஸ்தீன் – இஸ்ரேல் சமாதான பேச்சுவார்த்தைக்கு சட்டவிரோத குடியிருப்புக்கள் கட்டுவது தடையாக மாறுகிறது என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மேற்காசியா குறித்த விவாதத்தில் கலந்துகொண்ட வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அஹ்மத் தெரிவித்துள்ளார். ஹமாஸும், இஸ்ரேலும் பரஸ்பரம் கைதிகளை பரிமாற ஒப்பந்தம் செய்ததை வரவேற்ற இ.அஹ்மத் பரஸ்பரம் நம்பிக்கையை வளர்க்கவும், மோதல்களை ஓயச்செய்யவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கைதிகள் பரிமாற்றம் காஸ்ஸாவில் மக்களுக்கு துயரமாக மாறியுள்ள தடைகளை வாபஸ்பெறவதற்கு உதவியாக மாறும்.பிராந்தியத்தில் பிரச்சனைகளை பலப்பிரயோகம் மூலம் கையாளுவதற்கு பதிலாக பேச்சுவார்த்தைகள் மூலமாக மட்டுமே தீர்வுகாணவேண்டும்.அமைதி ஒப்பந்தத்தின் மீதான் நிபந்தனைகளுடன் அல்ல ஃபலஸ்தீனுக்கு ஐ.நாவின் உறுப்பினர் பதவியை அளிப்பது.சுதந்திர நாடு என்ற ஃபலஸ்தீன மக்களின் விருப்பத்தை சர்வதேச சமூகம் மதிப்போடு பார்க்கவேண்டும்.
இவ்வாறு இ.அஹ்மத் தெரிவித்துள்ளார்.