யாத்கிர்: கர்நாடக மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாநிலம் முழுவதும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரம் மிக வேகமாக நடந்து வருகிறது. மாநாட்டின் முக்கியத்துவத்தையும் அதன் செய்தியையும் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்க்கும் வண்ணம் நடைபெற்று வரும் இந்த பிரச்சாரம் நேற்று ஞாயிற்றுகிழமை கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் ஷாபூரில் வைத்து நடைபெற்றது.
பாப்புலர் ஃப்ரண்டின் யாத்கிர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது மெஹ்பூப் வரவேற்புரை நிகழ்த்தினார். பாப்புலர் ஃப்ரண்டின் கர்நாடக மாநில செயற்குழு உறுப்பினர் ஃபரூக்குர் ரஹ்மான் "இந்திய முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதி!" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். ஆதிக்க உயர் வர்கத்தினரலா முஸ்லிம் சமூகமும் இன்ன பிற பிற்படுத்தப்பட்ட சமூகமும் எந்தளவிற்கு அநீதம் இழைக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை விரிவாக எடுத்துக்கூறினார். அதன் பின்பு மாநாட்டின் முக்கிய நோக்கத்தையும் அதன் குறிக்கோளையும் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார்.
மற்றுமொரு மாநில செயற்குழு உறுப்பினர் அப்துர்ரஜாக் கெம்மார் உரையாற்றும்போது இந்தியாவில் ஃபாசிஸ பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை எடுத்துக்கூறினார். இன்று இந்த நாட்டில் சங்கப்பரிவார தீவிரவாதிகள் நடத்திய தீவிரவாத தாக்குதல்களை பட்டியலிட்டார். யாத்கிர் மக்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவோடு கைகோர்த்து அநீதிக்கெதிராக போராட வருமாறு அழைப்புவிடுத்தார்.
பல முக்கிய பிரமுகர்களும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இறுதியாக சலீம் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்