சிம்மோகா: கர்நாடக சிம்மோகா மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று உருது அரசு உயரி நிலைப்பள்ளி அருகே மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைவர் இலியாஸ் தும்பே அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது "நாட்டின் அரசியல் அமைப்பு சாசன சட்டத்தின் படி நமது நாடு ஜனநாயக, மதசார்பற்ற சோஷியலிச, குடியரசு இறையான்மை கொண்ட நாடாகும். இங்கே வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த நீதிகள் வழங்க்கபடவேண்டும்."
அவர் மேலும் கூறும்போது " இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகள் சட்டம் 15(1)ன் படி இந்திய அரசியல் சட்டம் ஒரு குடிமகனின் ஜாதியையோ, சமயத்தையோ, மதத்தையோ, இனத்தையோ வைத்து பாரபட்சமான நீதியை வழங்கக்கூடாது என்று கூறுகிறது."
எஸ்.டி.பி.ஐயின் கர்நாடக மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹன்னன், கர்நாடக தலித் சங்கர்சா சமிதியின் மாநில நிர்வாகி எம். குருமூர்த்தி, கர்நாடக கோமு செளஹர்தா வேதிகே வின் மாநில பொதுச்செயலாளர் கே.எல். அஷோக், மதரஸா அஹ்யாவுல் உலூமின் நிறுவனரும் அதன் தலைமை ஆசிரியருமான மசூது அஹமது ஹாஷிமி, கோமு வேதிகா ஷிமோகாவின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீபல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
பாப்புலர் ஃப்ரண்டின் சிம்மோகா மாவட்டத்தின் தலைவர் முஹம்மது ஃபர்வேஸ், "ஆஜ் கா இன்கிலாப்" உருது நாளிதழின் ஆசிரியர் முதஸ்ஸி அஹமது, எஸ்.டி.எம்ன் முன்னால் தலைவர் செய்யது முஸ்தாக், பாப்புலர் ஃப்ரண்டின் சிம்மோகா மாவட்ட செயலாளர் ஷாஹித் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் வரவேற்புரை நிகழ்த்தினார், காலித் சைபுல்லாஹ் நன்றியுரை நிகழ்த்தினார். பாப்புலர் ஃப்ரண்டின் சிம்மோகா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சலீம் கான் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். நூற்றுக்கணக்கானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.