சமுக ஒற்றுமை பொதுக்கூட்டம்.
கடந்த 28-10-2011 வெள்ளியன்று குவைத் இந்தியா ஃப்ரட்டர்நிட்டி ஃபாரம் (KIFF) சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த சமுக ஒற்றுமை பொதுக்கூட்டம் சகோதரர் அம்ஜத் அலி தலைமையில் ரவ்தா ஜம்மியத்துல் இஸ்லாஹி அல் இஜ்திமாஈ ஹாலில் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு துவங்கிய இவ்விழாவில் சகோதரர் கலீல் பாக்கவி அவர்கள் கிராத் ஓதி துவங்கி வைத்தார். அடுத்ததாக KIFF-ன்தமிழ் பிரிவு தலைவர் சகோதரர் அம்ஜத் தலைமையுரை நிகழ்த்தினார். அதன் பிறகு சகோதரர் அப்துல் அஜீஸ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளையும் அதற்க்கு PFI எடுக்கும் நடவடிக்கைகளையும் அதில் அடைந்த வெற்றியையும் பற்றி கூறினார்.மேலும் அவர் தனது உரையில் அடுத்த மாதம் 26-27 தேதிகளில் டெல்லியில் வைத்து PFI நடத்த இருக்கும் சமூக நீதி மாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார். அடுத்ததாக PFI-ன் செயல்பாடுகளை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது. அதை தொடர்ந்து சகோதரர் உதுமான் குஜராத் இனப்படுகொலை சம்பந்தமான எழுச்சி கீதத்தை பாடினார். அடுத்ததாக சகோதரர் மாஹின் அவர்கள் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி சிறப்புரை நிகழ்த்தினார்.. இறுதியாக சகோதரர் கிபாயத்துல்லா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட மக்கள் திரளாக கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு KIFF-ன் தன்னார்வ தொண்டர்கள் சிறப்பான எற்ப்படுகளை செய்தனர்.