மும்பை : மும்பை பன்னாட்டு விமான நிலையத்தில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தோட்டக்கள் வைத்து இருந்தமைக்காக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் நுராத் வயது 23, இவர் இந்தியாவிற்கு நண்பர்களுடன் சுற்றுலா(!) வந்திருந்த இவர் நேபாள் செல்ல மும்பை விமான நிலையம் வந்திருந்த இவரை விமான நிலைய காவல் அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது, அவரிடம் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டறியப்பட்டு உறுதி செய்த பின், அவரை மும்பை காவல் துறை துணை ஆணையர் சத்யனாராயண் சௌத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டார். எனினும் அப்பெண்ணிடம் இருந்து எவ்வளவு தோட்டாக்கள் பறிமுதல் செய்தனர் என்ற விபரத்தை அவர்கள் வெளியிடவில்லை.