நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 2 நவம்பர், 2011

கூடங்குளம்:வருங்கால தலைமுறையினருக்கான போராட்டம்- SDPI தேசிய பொதுச்செயலாளர் எ.ஸயீத்



Sayed
கூடங்குளம் : வருங்கால தலைமுறையினருக்கான போராட்டம்தான் அணுசக்தி நிலையத்திற்கு எதிராக கூடங்குளம் கிராமவாசிகள் நடத்திக்கொண்டிருக்கின்றனர் என சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் எ.ஸயீத் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுசக்தி நிலையத்திற்கு எதிராக தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்திவரும் கிராமமக்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினார் எ.ஸயீத். அப்பொழுது அவர் கூறியதாவது:’கூடங்குளம் தமிழகத்திற்கு மட்டும் பிரச்சனை அல்ல.மாறாக, கேரளா, கர்நாடகா உள்பட அனைவரின் பிரச்சனையாகும். ஆசையூட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் முன்னால் அடிபணிந்துவிடாதீர்கள். இயற்கையையும், மனிதர்களையும் அழித்துவிட்டு வாழ்க்கை வசதிகளை அதிகரிக்கக்கூடாது.’ என அவர் கூறினார்.
எஸ்.டி.பி.ஐயின் இன்னொரு தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்.ஆவாத் ஷெரீஃப் உரையாற்றுகையில், அணுசக்தி நிலையங்கள் மனித குலம் மற்றும் ஜீவராசிகளின் வம்ச நாசத்திற்கு காரணமாக மாறும் ஆபத்தான நிலையங்களாகும் என குறிப்பிட்டார்.
கேரளாவில் இதேபோன்ற சிந்தனையாளர்களுடன் இணைந்து கூடங்குளம் அணுசக்தி நிலையத்திற்கு எதிராக போராட்டத்தை வலுப்படுத்துவோம் என கேரள மாநில எஸ்.டி.பி.ஐயின் தலைவர் நாஸருத்தீன் எழமரம் தெரிவித்தார்.
இதன் ஒருபகுதியாக மனித உரிமை தினமான டிசம்பர்-10-ஆம் தேதி கேரளா-தமிழ்நாடு எல்லையில் கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நிகழ்ச்சி நடைபெறும். ஆட்சியாளர்கள், எதிர்கட்சியினர், சட்டசபை உறுப்பினர்கள்,மனித உரிமை மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் ஆகியோருக்கு இவ்விவகாரத்தின் தீவிரத்தை உணர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என நாஸருத்தீன் உறுதியளித்தார்.
மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் காதைப்பொத்திக்கொள்ளும் மத்திய அரசு கூடங்குளம் போராட்டத்தை புறக்கணிப்பது ஆபத்தை வரவழைக்கும் என தமிழக எஸ்.டி.பி.ஐயின் தலைவர் ஷேக் முஹம்மது தெஹ்லான் பாகவி கூறினார்.