நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 31 அக்டோபர், 2011

கேள்விகளுக்கு பயந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பை ரத்துச்செய்த அத்வானி

பெங்களூர் : ஊழலில் பா.ஜ.க ஊறித்திளைத்துள்ள நிலையில் ஊழலுக்கு எதிராக ஜனசேதனா என்ற ரதயாத்திரையை நடத்திவரும் பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி நேற்று கொச்சி மற்றும் பெங்களூரில் நடத்த தீர்மானித்திருந்த இரண்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பை ரத்துச்செய்தார்.
lk-advani










கர்நாடகாவில் நேற்று மீண்டும் ஒரு அமைச்சர் மீது லோக் ஆயுக்தா நிலவிடுவிப்பு மோசடி தொடர்பாக வழக்கு பதிவுச்செய்ய உத்தரவிட்டுள்ளதை அடுத்து பத்திரிகையாளர்களின் நெருடச்செய்யும் கேள்விகளுக்கு பதிலளிப்பதிலிருந்து தப்பிப்பதற்காக பத்திரிகையாளர்கள் சந்திப்பை எல்.கே.அத்வானி ரத்துச்செய்ததாக கருதப்படுகிறது. கொச்சியில் நேற்று பகல் முழுவதும் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த அத்வானி மாலையில் பெங்களூருக்கு சென்றார்.ஆனால் பத்திரிகையாளர்கள் சந்திப்பை ரத்துச்செய்ததற்கான காரணம் குறித்து பா.ஜ.க விளக்கமளிக்கவில்லை.
கர்நாடகா மாநிலத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் மட்டுமே அத்வானி உரை நிகழ்த்துகிறார்.கர்நாடகா முன்னாள் பா.ஜ.க முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மேலும் பல அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்கு பதிவுச்செய்யப்பட்டுள்ளது.இது தனது ஊழலுக்கு எதிரான யாத்திரையின் நம்பிக்கையை கெடுத்துவிடும் என அத்வானி அஞ்சுகிறார்.
இதற்கிடையே,’அத்வானியே! திரும்பச்செல்!’ என்ற முழக்கத்துடன் பெங்களூர் உள்பட கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திய 500க்குமேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களை போலீஸ் கைதுச்செய்துள்ளது.