"ரத்தின சபாபதி" இவரை தெரியாத முஸ்லிம்கள் தமிழகத்தில் இருக்கமுடியாது என்னும் அளவிற்கு புகழ்பெற்றவர். புகழ் பெற்றவர் என்றால் தான் செய்த சமூக சேவையின் மூலமாக அல்ல, மாறாக குள்ள நரித்தனம், முடிச்சவிக்கித்தனம், தேச விரோத செயல், சிறுபான்மை முஸ்லிம் விரோத போக்கு போன்றவற்றின் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப்பெற்றவர் தான் இந்த இரத்தின சபாபதி.
இவரைப்பற்றிய செய்திகளை நாம் ஏற்கனவே நமது தளத்தில் பலமுறை வெளியிட்டிருந்தாலும், ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது அவப்பெயரை ஏற்படுத்த முயன்ற இரத்தின சபாபதி போன்ற கயவர்களுக்கு உரிய தண்டனையும் அவரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுகளுக்கு நீதி கிடைக்கும் வரை இவரைப்பற்றிய நமது செய்திகள் ஒருபோதும் நின்றுவிடாது என்ற அடிப்படையில் மீண்டும் ஒரு முறை இந்த அயோக்கியன் செய்த நாடகத்தை விவரிக்கின்றோம்.
கடந்த 2006ஆம் ஆண்டு பெரும்பாலான தமிழக நாளிதழ்களில் செய்திகளின் தலைப்புகள் இவ்வாறு இருந்ததன்.
1. கோவையை தகர்க்க தீவிரவாதிகள் சதி!
2. பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு அம்பலம்!
3. மனித நீதிப் பாசறைக்கு தடை!
4. சக்திவாய்ந்த வெடிபொருட்களுடன் கோவையில் தீவிரவாதிகள் கைது!என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
அப்படி என்ன சக்தி வாய்ந்த குண்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று பார்த்தோமேயானால், குர்-ஆன் வசங்கள் கொண்ட அட்டைகள், 2 குறுந்தகடுகள், 4 எலக்ட்ரிக் வயர்கள், 3 எவரிடே பேட்டரிகள் போன்ற விளையாட்டுப்பொருட்களை வைத்துக்கொண்டு சக்திவாய்ந்த வெடிபொருட்களை பரிமுதல் செய்ததாக ஒரு மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றினார் இந்த ரத்தின சபாபதி. அத்தோடு இந்த செயலுக்கு அப்போதைய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவாக செயல்பட்டுக்கொண்டிருந்த "மனித நீதிப் பாசறை"க்கும் இன்னும் சில இளைஞர்களுக்கும் தொடர்பு உண்டு என்று கூறி கோவை மக்களை பீதிக்குள்ளாக்கினார். பின்னர் இதனை விசாரித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் இது முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் இதனை தள்ளபடி செய்வதாகவும் அறிவித்தது.
அன்றிலிருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நீதிக்காக நீண்ட போராட்டங்களை நடத்திவருகிறது. ஆனால் கடந்த திமுக அரசு இவருக்கு மேலும் பதவி உயர்வுகளை அழித்து அழகுபார்த்தது. சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சியில் தேர்வாணயக்குழு உறுப்பினராக நியமித்தது. இருந்த போதிலும் பாப்புலர் ஃப்ரண்ட் தனது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது.
தற்போது ஆதிமுக அரசு டி.என்.பி.எஸ்.சியில் நடந்த ஊழலை கண்டுபிடித்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் இந்த அயோக்கியன் தி கிரேட் இரத்தின சபாபதியும் சிக்கியுள்ளான். ரத்தின சபாபதிக்கு எதிரான ஆதாரங்களும் குற்றச்சாட்டுகளும் நிரம்ப் வழிகின்றனர். பொறுத்து இருந்து பார்போம் நீதி கிடைக்குமா என்று?
குமுதம் ரிப்போர்ட்டரில் இது தொடர்பாக வந்த செய்திகளை பாருங்கள்!