கர்நாடகாவில் ஆறு ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னணி அமைப்புகளுக்கும், ஏழு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கோ அவர்களுடைய உறவினர்களுக்கோ எடியூரப்பா அரசு 50 கோடி மதிப்பிலான அரசு நிலங்களையும் குறைந்தவிலைக்கும், இலவசமாகவும் வழங்கியுள்ளது.
3 லட்சத்து 50 ஆயிரம் பேர் நிலத்திற்கு மனு அளித்து காத்திருக்கும் வேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு மோசடியாக அரசு நிலங்களை எடியூரப்பா அரசு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் முதல்வர் பதவியை இழந்த எடியூரப்பா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் ராஷ்ட்ரோத்தனா பரிஷத்,ஜனசேவா வித்யா கேந்த்ரா, ஸம்ஸ்கார பாரதி, ஹிந்து ஜாக்ரன் வேதிகெ, மஹிளா தக்ஷத ஸமிதி, அனந்த சிஷு நிவாஸ் ஆகிய அமைப்புகள் நிலத்தை மோசடியாக சொந்தமாக்கியுள்ளன.
ஆர்.எஸ்.எஸ்ஸின் ராஷ்ட்ரோத்தனா பரிஷத்,ஜனசேவா வித்யா கேந்த்ரா, ஸம்ஸ்கார பாரதி, ஹிந்து ஜாக்ரன் வேதிகெ, மஹிளா தக்ஷத ஸமிதி, அனந்த சிஷு நிவாஸ் ஆகிய அமைப்புகள் நிலத்தை மோசடியாக சொந்தமாக்கியுள்ளன.
ஆர்.எஸ்.எஸ்ஸின் தொழிலாளர்கள் அமைப்பான பாரதீய மஸ்தூர் சங்கின்(பி.எம்.எஸ்) துணைத்தலைவர் எஸ்.கெ.சதாசிவ, ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக் பிரசாத் பாரதியின் மனைவியும் எம்.எல்.ஏவுமான மல்லிகா பிரசாத், பெங்களூரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் ஸ்ரீதர் பட்லா ஆகியோர் அரசு நிலத்தை மோசடியாக சொந்தமாக்கிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களில் முக்கியமானவர்களாவர்.
ஜனசேவா வித்யா கேந்த்ரா நடத்தும் பள்ளிக்கூடத்திற்காக 10 கோடி சந்தை மதிப்பிலான 10 ஏக்கர் நிலத்தை எடியூரப்பா வழங்கியுள்ளார். வீடுகளை கட்டுவதற்காக விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலமாகும் இது. ராஷ்ட்ரோத்தனா பரிஷத் அமைப்பிற்கு 13 கோடி ரூபாய் மதிப்பிலான 906 சதுர மீட்டர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.
ஸம்ஸ்கார பாரதிக்கு அளித்தது 2000 சதுர அடி நிலமாகும்.இந்நிலத்திற்கு சந்தை மதிப்பு 2.5 கோடி ரூபாயாகும்.மஹிளா தக்ஷத சமிதிக்கு 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான 396 சதுர மீட்டர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. அனந்த சிஷு நிவாஸிற்கு 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான 3,585 சதுர மீட்டர் நிலத்தை எடியூரப்பா வழங்கியுள்ளார்.
டி.கே.சதாசிவ வெல்கரா ஹாலில் 10 லட்சம் ரூபாய்க்கு 2400 சதுர அடி நிலத்தை சொந்தமாக்கியபொழுது அதன் சந்தை விலையோ ஒரு கோடி ரூபாயாகும்.மல்லிகா பிரசாத்திற்கு ஜெ.பி நகரில் 4 ஆயிரம் சதுர அடி நிலம் வழங்கப்பட்டுள்ளது.நான்கு கோடி சந்தை மதிப்பிலான ப்ளாட் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ராஷ்ட்ரோத்தனா பரிஷத் வெளியிடும் பத்திரிகையின் கட்டுரையாளர் பி.மலாத்திக்கு 1200 சதுர அடி நிலம் குறைந்த விலைக்கு அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் அதன் சந்தை மதிப்போ 1.2 கோடி ரூபாயாகும். பா.ஜ.க தலைவரான ஆர்.கே.மல்லிகாபாய்க்கு 4 ஆயிரம் சதுர அடி நிலம் வழங்கப்பட்டுள்ளது.இதன் சந்தை மதிப்பு நான்கு கோடி ரூபாயாகும். ஆர்.எஸ்.எஸ் கேடரான விஜய் சங்கரமாதவாவுக்கு பெங்களூரில் 2400 சதுர அடி நிலம் வழங்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் கேடரான பா.ஜ.கவின் எம்.எல்.ஏ ஷைலஜா ஸ்ரீநாத்திற்கும் 2400 சதுர அடி நிலம் வழங்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரோத்தனா பரிஷத்துதான் எடியூரப்பாவின் சங்க் மீதான அன்பிற்கு மிகவும் பாத்திரமாகி அதிகமான நிலத்தை மோசடியாக பெற்றுள்ளார்கள். நகரத்திலேயே 906 சதுர மீட்டர் நிலம் இவர்களுக்கு கிடைத்துள்ளது. சாதாரணமாக இத்தகைய நிலங்களை வழங்கும்பொழுது 10லிருந்து 30 வருடத்திற்கான குத்தகைக்கு அளிக்கப்படும்.குத்தகை கால வரம்பு முடிந்துவிட்டால் அவை மீண்டும் அரசுக்கு சொந்தமாகும். ஆனால இங்கு இந்த நிபந்தனை கூட கடைப்பிடிக்கப்படவில்லை.
எடியூரப்பாவின் நிலபேர ஊழலில் பெரும்பகுதியை விழுங்கியுள்ள ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவினர் அவர் மீது ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க தயங்கியதற்கு காரணம் தங்களுடைய பெயரை அவர் வெளியிட்டுவிடுவாரோ என்ற அச்சமே.
எடியூரப்பாவின் நிலபேர ஊழலில் பெரும்பகுதியை விழுங்கியுள்ள ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவினர் அவர் மீது ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க தயங்கியதற்கு காரணம் தங்களுடைய பெயரை அவர் வெளியிட்டுவிடுவாரோ என்ற அச்சமே.