நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 1 நவம்பர், 2011

மலேகான்:முஸ்லிம் இளைஞர்களின் ஜாமீன் மனுவை மத்திய அரசு எதிர்க்காது

malegaon295x200மும்பை: கடந்த 2006 ஆம் ஆண்டு மாலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் வாடி வரும் 9அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் ஜாமின் மனு வருகின்ற 9ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜாமீனில் விடுவதற்கான ஆவணங்கள் இன்று வரை தயாரிக்கப்படாததால் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி மஹாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் படையினரிடம் தெரிவித்துள்ளது.



உச்ச நீதிமன்றம் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி அன்று தேசிய சிறப்பு புலனாய்வுக்குழு வழக்கின் விசாரணை அறிக்கைகளையும், அதன் நிலைப்பாட்டையும் ஒப்படைக்கவேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது. அறிக்கைகளை ஒப்படைத்த பிறகு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நவம்பர் 19ம் தேதி அன்று  மேற்கொள்ள இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்பின் விசாரணையை மேற்கொண்டு வரும் என்.ஐ.ஏ ( நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்சி) குற்றம் சுமத்தப்பட்ட 9 நபர்களுக்கும் ஜாமீனில் விடுதலை அளிப்பதற்கு தடைவிதிக்கவில்லை. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறும்போது "மாலேகான் குண்டுவெடிப்பில் தான் ஈடுபட்டதாக அசிமானந்தாவே வாக்குமூலம் அளித்துள்ளதால் குற்றம் சுமத்தப்பட்ட மற்றவர்களுக்கு ஜாமீன் கிடைப்பதற்கு என்.ஐ.ஏ ஆட்சேபனம் தெரிவிக்காது!" என கூறினார்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் விடுதலை பெறுவதற்காக மனு அளித்திருந்தனர். என்.ஐ.ஏ மீண்டும் அவர்களை சோதனைக்கு உட்படுத்தியது. மூளை சோதனை செய்த பிறகு அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.

அசிமானந்தா கொடுத்த வாக்குமூலத்திலிருந்து குற்றவாளிகளுக்கும் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளலாம் என வழக்கறிஞர் காலித் ஆஜ்மி தெரிவித்தார். ஆஜ்மி அவர்கள் பல அப்பாவி இளைஞர்களுக்காகவும் வாதாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

மாலேகான் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் 9 அப்பாவி இளைஞர்களுக்காகவும் வாதாடி வருகிறார். "குண்டுவெடிப்பு சம்பவத்தில் இவர்கள் ஈடுபட்டார்கள் என்பதற்கு எந்தவிதமான நேரடி ஆதாரமும் இல்லை வற்புறுத்தப்பட்டு சில வாக்குமூலங்களைத்தான் பெற்றுள்ளார்கள்" என்று ஆஜ்மி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று முஸ்லிம்கள் தங்களது வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றி விட்டு வரும் போது மாலேகானில் உள்ள ஹமீதியா மஸ்ஜித் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் சம்ப இடத்திலேயே அப்பாவிம் பொதுமக்கள் 37 பேர் கொல்லப்பட்டனர்.

மாலேகான் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட பின்பு வழக்கம் போல் பாகிஸ்தானில் செயல்படுகின்ற தீவிரவாத இயக்கம் தான் இதற்கு காரணம் என்றும், சிமி தீவிரவாதிகள் தான் காரணம் என்றும் ஊடகங்கள் அனைத்தும் செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தது. மஹாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப்படை காவல்துறை அதிகாரியும் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்ட கர்கரேயின் விசாரணையின் பிரதிபலிப்பால வழக்கு தலை கீழாக மாறியது. பிரக்யா சிங் தாகூர் என்ற பெண் சாமியார் கைது செய்யப்பட்டார். பின்பு அஜ்மீர் குண்டு வெடிப்பு மற்றும் சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு ஆகிய இரு வழக்கிலும் சிக்கிய அசிமானந்தாவின் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் மாலேகான் குண்டுவெடிப்பிலும் தான் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தான். இறுதியில் இந்துத்துவ தீவிரவாதிகளால் தான் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது என்ற உண்மை ஊர்ஜிதமாகியது.

அசிமானந்தாவின் வாக்குமூலத்திற்கு பிறகு மத்தியிலும் மஹாராஷ்டிரா மாநிலத்திலும் ஆட்சி செய்துகொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அப்பாவிகளை உடனே விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் சட்டவிதிமுறைகளினால் அப்பாவிகளின் விடுதலை தாமதிக்கப்பட்டுவருகிறது.

தாமதிக்கப்படும் நீதி! மறுக்கப்படும் நீதிக்கு சமமானது என்றே கூற இயலும். நிரபராதிகள் என தெளிவாக தெரிந்த பின்னரும் சட்டவிதிமுறைகளைக் காரணம் காட்டி சிறைகொட்டரைகளில் அடைத்து வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? செய்யாத குற்றத்திற்காக கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்ற இவர்களது வாழ்க்கையை அரசாங்கத்தால் திருப்பி கொடுக்க இயலுமா?

நன்றி: டூ சர்கில்ஸ்