நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 2 நவம்பர், 2011

எஸ்.டி.பி.ஐயினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு

சென்னை: சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கெதிரான காவல்துறையின் அராஜக போக்கு சென்னையில் அரங்கேறியிருக்கிறது. எஸ்.டி.பி.ஐ துறைமுக தொகுதி தலைவர் அமீர் சுல்தான் அவர்களை பொய் வழக்கு போட்டு காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுகிழமை அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்பகுதியில் அன்று இரவு அப்பகுதியில் உள்ள சில ஆளுங்கட்சியை குண்டர்களுக்கும் சில நபர்களுக்கும் தகராறு ஏற்பட்டு இருவரும் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில்
அதிமுகவைச்சேர்ந்த 3 நபர்கள் படுகாயமுற்றிருக்கின்றனர். இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ யின் துறைமுக தொகுதி தலைவரும் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 60வது வார்டில் வேட்பாளராக  போட்டியிட்ட அமீர்சுல்தான் மீது காழ்புணர்ச்சியோடு செயல்பட்டு கடந்த திங்கட்கிழமை நடு இரவு 40 போலீஸாருடன் வந்து வீட்டின் கதவை உடைத்து, பெண்கள் மீது கடுமையான வார்த்தைகளால் திட்டி, அவரது தாயாரையும் காயப்படுத்திவிட்டு அமீர் சுல்தானை கைது செய்துள்ளார் ஐஸ்ஹவுஸ் பகுதி டி-4 காவல் நிலை அதிகாரி ராஜேந்திரன்.

விசாரணைக்காக அழைத்துச்செல்கிறோம் என்று கூறிவிட்டு அதிமுகவினர் தாக்கப்பட்ட சம்வத்தில் தொடர்புபடுத்தி கொலை செய்ய முயற்ச்சி செய்தார் என்றும் 20 பவுன் நகையை கொள்ளையடித்தார் என்றும் பொய்வழக்கு போட்டு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

துறைமுக தொகுதி 60வது வார்டில் போட்டியிட்ட அமீர் சுல்தான் அவர்கள் அதிமுகவின் தோழ்விக்கு முக்கிய காரணமாக இருந்ததினால் காழ்புணர்ச்சியோடு ஆளும் கட்சியினர் செயல்பட்டு காவல்துறையினரின் உதவியோடு அராஜக போக்கில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு இன்னும் பல பேர் மீதும் பொய்வழக்கு போட்டுள்ளனர்.

ஜெயலலிதாவின் ஆட்சி தொடங்கி வெறும் ஐந்து மாதங்களே ஆன நிலையில் சிறுபான்மை மக்களில் மீது தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்படுகிறது. இத்தகையை பொய்வழக்குக்களை சட்டத்தின் வாயிலாக சந்திப்போம் என்றும் அதிமுக வின் ஆட்சி அமைத்ததும் இதுவெல்லாம் ஏற்படும் என்று நாங்கள் முன்பே கணித்ததுதான் என்றும் எஸ்.டி.பி.ஐயின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆளும் கட்சியின் தூண்டுதலின் பேரில் SDPI நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் 

தேர்தல் காழ்புணர்வின் காரணமாக ஆளும் அ.தி.மு.க வின் தூண்டுதலின் பேரில் SDPI ன் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது காவல் துறை பொய்வழக்கு பதிவு செய்துள்ளது .திருவல்லிகேணி பகுதியில் நடைபெற்ற மோதல் சம்பவத்தில் எந்த விதத்திலும் தொடர்பில்லாத ,SDPI ன் துறைமுகம் தொகுதி தலைவர் அமீர் சுல்தான் மற்றும் திரு.வி.க நகர் தொகுதி தலைவர் ஜியாவுல்லா மற்றும் செய்யது அப்துல்லாஹ் உசேன் ஆகியோர் பொய்வழக்கில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளது .
ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தலை முறியடிக்க அழைக்கிறது சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா 


இடம் :சென்னை ,மெம்மோரியல் ஹால் முன்பு 
நாள் :5.11.2011, மாலை 4.30 (சனிக்கிழமை)