நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 31 அக்டோபர், 2011

சிலைகளுடன் தலைமறைவான சாமியார் ராகவேந்திர தீர்த்தா கைது

andra_301011-1கொச்சி : கவுடா சரஸ்வதா பிராமண சமூகத்தின் ஆன்மீக மையமான காசி மடத்திலிருந்து விலைமதிப்பான சிலைகளுடன் தலைமறைவான ராகவேந்திர தீர்த்தா(வயது 39) ஆந்திராவில் கடப்பா போலீசாரால் கைதுச்செய்யப்பட்டார். கடப்பாவில் ஒரு ப்ளாட்டில் சந்தேகத்திற்கிடமான சூழலில் தங்கியிருந்த இவரை அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீஸார் கைதுச்செய்தனர்.
காசிமடத்திலிருந்து காணாமல்போன விலைமதிப்பான சிலைகளும்,ரத்தின கிரீடமும் ராகவேந்திர தீர்த்தாவிடமிருந்து போலீஸ் கைப்பற்றியதாக கருதப்படுகிறது. ராகவேந்திரா தீர்த்தாவின் மீது வாரிசுரிமை தொடர்பாக கேரள மாநிலம் எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்திலும் வழக்கு உள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு தனக்கு பாதகமாக வெளிவந்தவுடன் கொச்சியில் புதுக்குல வெட்டத்தில் துவாரகா என்ற ஆசிரமத்தில் வசித்த ராகவேந்திரா, கடந்த மார்ச் மாதம் இங்கிருந்து தலைமறைவானார்.