"சிறுபான்மை சமூகம் குறிப்பாக முஸ்லிம் சமூகம் அரசியல் சக்தி இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களை ஓட்டு வங்கியாகவே பயன்படுத்தி வருகின்றனர். எனவே இனியும் நாம் காலம் தாமதிக்கக்கூடாது உடனடியாக நமது அரசியல் பலத்தை இந்த ஆட்சியாளர்களுக்கு காட்ட வேண்டும் என்ற அடிப்படையில் சிறுபான்மையினருக்கென்று நிறை அரசியல் கட்சிகள் உருவாகி வருகின்றது. அப்படி சில வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட கட்சியின் நிலையை படியுங்கள்."
புதுடெல்லி: கடந்த ஞாயிற்றுகிழமை அன்று பீஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா ( ) இரண்டாக உடைந்தது. அக்கட்சியை விட்டு வெளியேறியவர்கள் ராஷ்டிரிய பீஸ் பார்ட்டி ( )என்ற புதிய கட்சியை உருவாக்கியுள்ளனர். சிறுபான்மயினருக்காக உத்திரபிரதேசத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பீஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா மூன்று வருட காலத்திற்குள் இரண்டாக உடைந்துள்ளது. கிழக்கு உத்திர பிரதேசத்தில் கடந்த கால தேர்தல்களில் கணிசமான வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனை அறிவித்த சமயத்தில் கட்சியிலிருந்து பிரிந்தவர்களில் தலைவராக இருந்த அப்துர்ரஹ்மான் அன்சாரி பீஸ் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தலைவராக இருக்கின்ற டாக்டர் ஐயூப் அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். வகுப்புவாத சக்திகளுக்கு துணைபோவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அப்துர் ரஹ்மான் அன்சாரி அவர்கள் தானும் தனது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து வெளியேறியதற்கான காரணங்களை கூறினார். கட்சியின் தலைவராக இருக்கும் டாக்டர் ஐயூப் அவர்கள் குற்றவாளிகளுக்கு கட்சியில் அதிக அளவில் இடம் அளிப்பதாகவும், தேச விரோத கும்பல்களுக்கும் துணைபோவதாகவும் குற்றம் சுமத்தினார். கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு மாறு செய்வதாகவும் கூறினார்.
அப்துர்ரஹ்மான் அன்சாரி மேலும் கூறுகையில், தங்களது கட்சியான ராஷ்டிரிய பீஸ் பார்ட்டி விரைவில் பீஸ் பார்ட்டி ஆஃப் இந்தியாவை முறியடிக்கும் ஏனென்றால் ஆத்மார்த்தமாக கட்சிக்காக பணி செய்யக்கூடியவர்கள் கட்சியின் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். வெகு சீக்கிரமே அவர்கள் அனைவரும் அக்கட்சியை விட்டு வெளியேறி ராஷ்டிரிய பீஸ் பார்டியில் இணைந்துவிடுவார்கள் எனக்கூறினார்.
அன்சாரி அவர்கள் மேலும் கூறும்போது "டாக்டர் ஐயூப் அவர்கள தன்னையும் கட்சியையும் வகுப்புவாத சக்திகளிடம் அடமானம் வைத்துவிட்டார்." எனக் கூறினார். குறிப்பாக பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் உடனான தொடர்பை பற்றி கண்டித்து கூறினார். அன்சாரி அவர்கள் ஐயூப் மீது கூறும் குற்றச்சாட்டுகள் ஒன்றும் புதிதல்ல. பல காலங்களாகவே ஐயூப் அவர்கள் செய்து வந்த தவறுகளை சுட்டிக்காட்டி வந்தாராம். பா.ஜ.கவிடம் காசு வாங்கிக்கொண்டு முஸ்லிம்களின் ஓட்டை பிரிக்கும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார் இந்த ஐயூப்.
வரக்கூடிய தேர்தலில் 403 இடங்களிலும் ராஷ்டிரிய பீஸ் பார்ட்டி போட்டியிடும் என்றும், தங்களுடைய கருத்துக்கு ஒத்துப்போகிற கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் என்றும் அன்சாரி கூறினார்.
இன்னொரு பக்கம் பீஸ் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் ஊடக தொடர்பாளர் யூசுஃப் அன்சாரியிடம் இதைப்பற்றி கேட்டபோது இதனை வன்மையாக மறுத்துள்ளார். தங்களது கட்சிக்குள் இதுவரை எந்த பிரிவும் ஏற்படவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். அத்தோடு மட்டுமல்லாமல் ராஷ்டிரிய பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் அன்சாரி கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
தற்போது புதிதாக கட்சியை தொடங்கி இருப்பவர்களுக்கும் எங்களது கட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவர்கள் எங்கள் கட்சியில் ஈடுபாட்டோடு செயல்பட்டதில்லை. அவர்களுக்கென்று கொடுக்கப்பட்ட வேலைகளை அவர்களால் செய்ய முடியாததால் அவர்களாகவே கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர் என்று யூசுஃப் அன்சாரி கூறியுள்ளார்.
யூசுஃப் அன்சாரி அப்துர்ரஹ்மான் அன்சாரி பற்று கூறும்போது "அவர் பீஸ் பார்டியை விட்டு வெளியேறிய பிறகு சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். பின்னர் அதிலிருந்து விலகி தற்போது புதிய கட்சியை தொடங்கியுள்ளார்" என்று அவர் மீது குற்றம் சுமத்துகிறார்.
கட்சியின் வளர்ச்சியை ஜீரணிக்கமுடியாதவர்களால பரப்பப்படும் பொய் குற்றச்சாட்டுகள் தான் இவை. தற்போது கிழக்கு உத்திர பிரதேசத்தில் பீஸ் பார்ட்டிக்கான ஆதரவு பெறுகிவருவதாக யூசுஃப் அன்சாரி தெரிவித்தார்.