தென்இந்தியாவில் நாங்களும் கால்பதித்துவிட்டோம் என்று முதன் முதலாக கர்நாடகாவில் ஆட்சியை பிடித்ததும் அக்கட்சியின் மூத்த தலைவரான சுஷ்மா சுவராஜ் பெருமிதமாக பேட்டியளித்தார். பா.ஜ.கவின் வரலாற்றில் தென்இந்தியாவில் முதல் முதலைமைச்சராக பதவி ஏற்ற எடியூரப்பாவின் செயலால் பா.ஜ.க தலைமை தற்போது இஞ்சி திண்ற குரங்குபோல் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் முழித்துக்கொண்டிருக்கிறது.
ஊழலுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தருகிறோம் என்ற ரீதியில் அவருடைய போராட்டங்களில் கலந்து கொண்ட பா.ஜ.க தலைவர்களும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் எடியூரப்பா விஷயத்தில் ஊமையாகிப்போயினர்.
சமீபத்தில் நில ஊழல் வழக்கில் சிக்கி, முதலமைச்சர் பதவி பரிக்கப்பட்டு, கடந்த தீபாவளியை சிறைச்சாலையில் சிறப்பாக கொண்டாடிவிட்டு, நெஞ்சு வலி நடிப்பையும் அரேங்கேற்றி விட்ட எடியூரப்பாவின் ஊழல் விளையாட்டில் நடைபெற்ற தில்லுமுல்லுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. (அதிர்ச்சி என்பது நமக்கல்ல மாறாக பா.ஜ.கவினருக்குத்தான்).
பொதுமக்களுக்காகவும், அரசாங்கத்திற்காகவும் பகிர்ந்தளிக்க வேண்டிய நிலங்களை முறையாக செய்யாமல் தாய்கழகமான ஆர்.எஸ்.எஸ் மீது கொண்டு பற்றால் நிலங்களை திருட்டுதனமாக தாரை வார்த்திருக்கிறார் திருவாளர் எடியூரப்பா.
எடியூரப்பாவின் கைதுக்கு பிறகு முதலைமச்சராக பதவி ஏற்று மூன்று மாதங்களாகியும் டி.வி. சதானந்தா கெளடா நிர்வாகத்தினை சீர்படுத்த முடியாமல் திணறி வருகிறார். பெங்களூரில் ஆர்.எஸ்.எஸ்ற்கு சட்டவிரோதமாக நிலங்களை பகிர்ந்தளிக்கப்பட்ட விவகாரம் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்போவதாக தற்போதையை முதலமைச்சர் சதானந்தா கெளடா தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா முதலைமைச்சராக இருந்த போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதோடு தொடர்புடைய அமைப்புகளுக்கு சட்டதிற்கு புரம்பாண முறையில் நிலத்திற்கான உரிய மதிப்பீடு இல்லாமல் மிகக்குறைந்த விலைக்கு கொடுத்திருக்கிறார். இதனால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இதன் பின்புலத்தோடு இயக்கப்படும் பல அமைப்புகளுக்கு நிலம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
வடக்கு பெங்களூரில் உள்ள சதாசிவநகரில் 900 சதுர மீட்டர் உள்ள நிலப்பரப்பை சட்டத்திற்கு புரம்பாக ஆர்.எஸ்.எஸ்-ன் கூட்டு அமைப்பான ராஷ்துரோதன பரிஷத் என்ற அமைப்பிற்கு ஒதுக்கியுள்ளார். சமூக செயல்பாட்டிற்காக ஒதுக்க வேண்டி நிலத்தை சட்டத்திற்கு புரம்பாக தனது சஹாக்களின் உதவியோடு போலியான ஆவணங்களை தயார் செய்து மிகக்குறைந்த விலைக்கு விற்றிருக்கிறார். ஆர்.எஸ். எஸ் நடத்தும் பள்ளிக்கூடம் ஒன்றிற்கு பெங்களூர் அருகே 10 ஏக்கர் நிலப்பரப்பையும் சட்டத்திற்கு புரம்பான முறையில் தாரைவார்த்திருக்கிறார்.
அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட விசாரணைக்குழு தனது இறுதி விசாரணை அறிக்கையில் கிட்டத்தட்ட 40,000 ஏக்கர் அளவிலான அரசாங்கத்தின் நிலங்கள் சட்டத்திற்கு புரம்பான முறையில் பங்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையை சமர்பித்துள்ளது.
தற்போது சிறையிலிருக்கும் எடியூரப்பாவின் ஜாமின் மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
"இப்படி மக்களின் வரிப்பணத்தையும் அரசாங்கத்தையும் ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை ஊழல் செய்துவிட்டு "ஊழலை எதிர்த்து போராடுகிறோம்" என்று கூறி நாடு முழுவதும் பிரச்சாரம் செய்வார்களாம் மக்களும் அவர்களை நம்பி ஆதரவு கொடுக்கவேண்டுமாம்...."
"இத்தகை கேடுகெட்ட செயல்களை செய்வதற்கு பதிலாக நாக்கை பிடிங்கிக்கொண்டு சாகலாம்" என பொதுமக்களில் ஒருவர் நொந்து கொண்டு பேசியது போல கனவு கண்டேன்