புதுடெல்லி/போபால் : தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஷஹ்லா மஸூத் கொலையில் டெல்லியில் சில அரசியல் தலைவர்களுக்கு தொடர்பிருப்பதாக சி.பி.ஐக்கு தகவல் கிடைத்துள்ளது. சி.பி.ஐயின் லக்னோ பிரிவு நடத்திய விசாரணையில் இதுக்குறித்த தெளிவான தகவல் கிடைத்துள்ளது.
டெல்லியில் சில அரசியல் தலைவர்களுக்கு ஷஹ்லாவின் கொலையில் பங்கிருப்பதாக சி.பி.ஐ கூறினாலும் அவர்கள் யார்? என்பது குறித்து தெரிவிக்கவில்லை.இக்கொலைவழக்கில் நம்பத்தகுந்த தகவலை அளிப்பவர்களுக்கு 5 லட்சம் பரிசுத்தொகையை சி.பி.ஐ அறிவித்திருந்தது.