லண்டன் : சைபர் தாக்குதல்களை எதிர்கொள்வது தொடர்பான சர்வதேச மாநாடு லண்டனில் துவங்கியுள்ளது.இரண்டு தினங்கள் நடைபெறும் மாநாட்டில் 60 நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். சைபர் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தும் குற்றங்கள் வலுவடையும் சூழலில் சைபர் தாக்குதல்களை எவ்வாறு சரியாக தடுக்கலாம் என்பது குறித்து மாநாடு விவாதிக்கும்.
இம்மாநாட்டில் சைபர் துறையைச்சார்ந்த ஏராளமான வல்லுநர்கள் பங்கேற்கின்றனர்.பிரிட்டனில் சைபர் தாக்குதல் படிப்படியாக அதிகரித்துள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை அளித்த எச்சரிக்கையை தொடர்ந்து சைபர் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. பிரிட்டீஷ் வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹேக் இம்மாநாட்டிற்கு தலைமை வகிக்கிறார்.சீனாவும், ரஷ்யாவும் இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ளன.சைபர் தாக்குதல்களுக்கு பின்னணியில் முக்கியமாக செயல்படுவது சீனாவும், ரஷ்யாவும் என பிரிட்டீஷ் உளவுத்துறை தெரிவித்திருந்தது. சைபர் தாக்குதல்கள் மூலம் உலகமுழுவதும் 60 ஆயிரம் பவுண்ட் இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதல்களை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை. இதில் எல்லோருக்கும் வசதியான புதிய சர்வதேச வழிகாட்டுதல் வரைவு தேவை தயார் செய்யவேண்டும் என பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது.