பணத்தின் உறைவிடத்தை குறித்து தெளிவான விபரங்கள் அளிக்காமல் நன்கொடையாக வழங்கியவர்களின் 42.55 லட்சம் ரூபாய் திருப்பி அளிக்கப்படும் என ஹஸாரே குழுவினர் தீர்மானித்துள்ளனர். ஹஸாரே குழுவினரின் செயலகமான பப்ளிக் காஸ் ரிசர்ச் ஃபவுண்டேசன்(பி.சி.ஆர்.எஃப்) ஏப்ரல் முதல் தேதி துவங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஹஸாரே குழுவைச்சார்ந்த அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக பொருளாதார ரீதியிலான குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அக்குழுவினரின் தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டது. பி.சி.ஆர்.எஃபின் அறங்காவலர்களில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே போன்ற பிரமுகர்கள் இல்லை என்பது சுவாமி அக்னிவேஷின் குற்றச்சாட்டாகும்.நன்கொடையாக கிடைத்த தொகையிலிருந்து 1.5 கோடி ரூபாய் ஹஸாரே குழுவினர் செலவழித்துள்ளனர்.
அதேவேளையில் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து கிடைத்த 42.55 லட்சம் ரூபாயை திருப்பியளிக்க ஹஸாரே குழுவினர் தீர்மானித்துள்ளதை குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கேள்வி எழுப்பியுள்ளார். அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து நன்கொடையை பெறுவதும், அதனை அவர்களுக்கு திருப்பியளிப்பதும் அமானுஷ்ய சக்தி உடையவர்களால் மட்டுமேசெய்யமுடியக்கூடிய வித்தை என திக்விஜய்சிங் கிண்டலாக கூறியுள்ளார்.