புதுடெல்லி : மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியா 134-வது இடத்தை பிடித்துள்ளது. 187 நாடுகளை உட்படுத்தி ஐ.நா வெளியிட்டுள்ள வளர்ச்சி குறியீட்டு பட்டியலில் போரால் சீர்குலைந்துள்ள ஈராக்கும், ஏழை நாடாக கருதப்படும் பிலிப்பைன்ஸும் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முந்தைய இடங்களை பிடித்துள்ளன.
பால் சமத்துவமின்மை மிக அதிகமாக நிலவும் தெற்காசிய நாடுதான் இந்தியா என ஐ.நா அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் 61.2 கோடி மக்கள் வறுமையில் உழலுவதாக அந்த குறியீடு தெரிவிக்கிறது.ஆனால், வன அழிப்பை தடுப்பது,இயற்கை பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியா முன்மாதிரியான செயல்படுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.