நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 1 நவம்பர், 2011

தேர்தலில் ஷியா மற்றும் ஆர்.எஸ்.எஸ் தங்களுடைய கருதுவேருபாடுகளை களைய முடிவு



M_Id_244116_K_S_Sudharshan_and_Maulana_Kalbe_Sadiq_arrive_for_a_press_conference_in_Lucknow_on_Sunday
லக்னோ : ஆர்.எஸ்.எஸ் ன் மூத்த தலைவர்களுள் ஒருவரான கே.எஸ்.சுதர்சன் மற்றும் ஷியா பிரிவை சேர்ந்த பண்டிதர் கல்பே சாதிக் ஆகிய இருவரும் தேர்தல் நேரத்தில் மத தொடர்பான கருத்து வேறுபாடுகளை களைந்து ஒன்றாக இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளனர். இந்த சந்திப்பை முஸ்லிம் ராஷ்ட்ரிய மனச் என்னும் ஆர்.எஸ்.எஸ் ன் கிளை அமைப்பு லக்னோவில் கடந்த ஞாயறு அன்று ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கூட்டம் முடிந்த பின்னர் ஆர்.எஸ்.எஸ் யின் தலைவர் சுதர்சன் கூறியதாவது இந்தியாவில் தேர்தல் முறைகளை மாற்ற வேண்டும் என்றும் இனி எந்த வேட்பாளர் 50 % வோட்டு வாங்குகிறாரோ அவர் வெற்றிபெற்றவர் என்று அறிவிக்க வேண்டும் என்றும் மேலும் அவ்வாறு எந்த வேட்பாளரும் பெறவில்லை என்றால் ஒரு வாரத்திற்குள் மீண்டும் தெர்ர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் தேர்தலில் எந்த வேட்பாளரும் மதம் மற்றும் சாதீய பலத்தால் வெற்றிபெறுவதை தடுக்கவேண்டும் என்று கூறினார்.
ஷியா பிரிவை சேர்ந்த பண்டிதர் கல்பே சாதிக் கூறியதாவது வோட்டு அளிப்பவர் வாக்கு அளிக்கும்போது மதம் மற்றும் இனம் பார்க்கக் கூடாது என்றும் நல்லவரா என்று மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் எந்த முஸ்லிமும் நல்லவரல்லாத ஒரு முஸ்லிமிற்கு வாக்கு அளிக்கக் கூடாது என்றும் அது போன்றே ஹிந்துக்களும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ் ஹிந்து ராஷ்ட்ரம் அமைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு முஸ்லிம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் எதிராக பல சதிவேலைகளை செய்து வரும் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் ஷியா பிரிவு உறவு வைத்துக் கொள்வது சற்று துரதஷ்ட வசமானது என்பது குறிப்பிடத்தக்கது.