நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 1 நவம்பர், 2011

சமூக நீதி மாநாடு ஓர் அறிமுகம்:

சமூக நீதி என்பது மக்களை குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட தத்துவமே, சமூக ஏற்றத்தாழ்வின்மை, பொருளாதார சமத்துவம், சமவாய்ப்பு, வளங்களை சீராக பங்கிடுதல், வளர்ச்சியில் அனைவருக்கும் பங்கு என அனைத்தையும் இந்த தத்துவம் உள்ளடக்குகிறது. பாரபட்சமான நீதியானது ஒரு நாகரீக சமூகத்தை உருவாக்குவதில் பெரும் தடையாக இருப்பதோடு மட்டுமல்லாம வன்முறை மற்றும் அழிவிற்கு வழிவகுக்கும்.



மேலும் சமூக நீதி என்பது நமது அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையில் ஒன்றாகு. இத்தகைய சிறப்புமிக்க அரசியலமைப்பின்படி நடத்தப்படும் ஆட்சி வளமிக்கதாகவும் அனைத்து குடிமக்களுக்கும் ஜனநாயகத்திற்குட்பட்ட உரிமைகளையும் சலுகைகளையும் நிச்சயமாக பெற்றிருப்பார்கள். ஆனால் தற்போது நடப்பவற்றை பார்க்கும் போது பல கசப்பான உண்மைகளை நம்மால் காணமுடியும்.

மக்கள் நலனில் அக்கறை கொண்டதாக உருவாக்கப்பட்ட நமது நாடு, முற்றிலுமாக ஒரு சந்தையாக மாறியுள்ளது. அடித்தட்டு மக்களுக்கு அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இத்தகைய அடக்குமுறைகள் தங்கள் விதியின் ஒரு பகுதி என்று இந்த மக்கள் நம்பவைக்கப்படுகின்றனர். தங்களின் உரிமைகளுக்காக இவர்கள் நடத்தும் போராட்டங்கள் நசுக்கப்பட்டு, வளர்ச்சிக்கும் தேசத்திற்கும் எதிரானவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர்.

அவதிப்படும் மக்கள்:

119 வளரும் நாடுகளில் எடுக்கப்பட்ட‌ உலக வறுமை குறியீட்டு அட்டவணையில் இந்தியா கடைக்கோடியில் 96வது இடத்தில் உள்ளது. இதில் வங்காளதேசம் தவிர்த்து மற்ற அனைத்து அண்டை நாடுகளை விடவும் நாம் மோசமான நிலையிலேயே உள்ளோம். இந்தியாவில் 41 கோடி மக்கள் வறுமையில் உள்ளதாக பன்முக பரிணாம வறுமைக்குறியீடு (Multi - Dimensional Poverty Index - MPI ) கூறுகிறது. இந்த தரப்பட்டியலில் நாம் 63 வது இடத்தில் உள்ளொம்.

6 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 4.2 கோடி குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்வதில்லை. நமது நாட்டில் 16 சதவிகித கிராமங்களில் ஆரம்ப பாடசாலைகள் கிடையாது. மிக கடினமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 5 கோடி சிறுவர்களை கொண்ட நமது நாடு உலகத்திலேயே 2வது இடத்தை பிடித்துள்ளது.

நமது நாட்டில் ஆளும் கட்சிகளும், எதிர்கட்சிகளும் ஒரே மாதிரியான பொருளாதார மற்று வெளியுறவு கொள்கைகளையே கொண்டிருப்பது நமது துரதிஷ்டமாகும். முதலாளித்துவம் மட்டுமே நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்லும் வழியாக காட்டப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் பெரும் பண முதலைகளில்ன் ஆதரவிலே செயல்படுவதினால் அக்கட்சிகள் தங்கள் முதலாளிகளை திருப்திப்படுத்த அல்லும் பகலும் உழைப்பது நமக்கு ஆச்சரியமளிப்பதில்லை.

நமது உள் நாட்டு விவகாரங்களில் வெளி நாட்டு நிறுவனங்களான உலக வங்கி மற்றும் ஐ.எம்.எஃப்-ன் அதிகமான தலையீடுகள் உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் அரசோடு கைகோர்த்துக்கொண்டு நமது நாட்டின் இயற்க்கை வளங்களை கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்கள். இவ்விசயத்தில் இடதுசாரிகளும் ஆதிக்க சக்திகளுடன் கைகோர்த்து செயல்படுகிறார்கள்.

தலித்கள் மற்றும் ஆதிவாசிகள் ஏமாற்றப்படுதல்:

சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகளுக்கு பிறகும் பல அரசுகள் மாறிமாறி ஆட்சியை பிடித்த போதும் தலித்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை. தலித்கள் மற்றும் ஆதிவாசிகளை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டும் அந்த சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதில்லை. இந்த தலித் மற்றும் ஆதிவாசிகளை பாதுகாக்கும் சட்டங்களால் தண்டனை பெற்றவர்கள் என்பது மிக மிக குறைவே. இந்த தலித்கள் மற்றும் ஆதிவாசிகள் பாதுகாப்பு சட்டத்தை ஆய்வு செய்யும்போது கர்நாடகா, ஆந்திரா, தமிழ் நாடு, ஆகிய மாநிலங்களில் 646 வழக்குகளில் 578 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வெறும் 27 வழக்குகளிலே தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள வழக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கிராமப்பகுதிகளில் 3ல் 2 தலித்துகள் நிலமில்லாதவர்களாக இருக்கிறார்கள் அல்லது நிலமில்லாதவர்களுக்கு ஒப்பானவர்களால இருக்கிறார்கள். டெல்லி போன்ற மாநிலங்களில் பழங்குடியினரின் நிலை மிகவும் மோசமானதே. சிறு சிறு பகுதிகளில் பரவி கிடப்பதால் இவர்களை எந்த அரசோ அல்லது அரசியல் கட்சியோ கண்டுகொள்வதில்லை. இவர்களது இடத்தினையும் ஆக்கிரமித்து சுரங்க நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்க மாஃபியாக்கள் ஒரே இரவில் ஆதிவாசிகளின் காட்டுப்பகுதிகளை, உயிரற்ற பாலைவனங்களாக மாற்றி வருகிறார்கள். இந்த மாஃபியாக்களால் சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்ட ஆதிவாசிகள் மாற்று இடங்களில் குடியமர்த்தப்படவில்லை. இத்தகைய அநியாயங்களை அவர்கள் எதிர்க்கத் துணிந்தால் அவர்கள் மாவோயிஸ்ட்கள் என்று முத்திரை குத்தப்பட்டும் அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்பட்டும் சிறை கொட்டடிகளில் அடைக்கப்பட்டும் சில நேரங்களில் கொல்லப்பட்டும் வருகிறார்கள்.

சிறுபான்மை சமூகம் குறிவைக்கப்படுதல்:

நம் நாட்டில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சமூகம் தான் முஸ்லிம்கள் அனைத்து ஆட்சியாளர்களாலும் அவர்கலை முன்னேற்றுவதாக கூறி தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். அரசு நியமித்த நீதிபதி ராஜேந்தர் சர்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிசன் விவாதிக்கப்பட்டு அமுல்படுத்தப்படாமல் நிலுவையில் இருக்கிறது. முஸ்லிம்களின் அடையாளம், பாதுகாப்பு மற்றும் சம நீதி என்பது பெரும் அபாயகரமான சூழ்நிலையில் உள்ளதாக, சச்சார் முஸ்லிம்கள் சந்தித்து வரும் 3 பெரும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

1992 டிசம்பர் 6 அன்று சங்கபரிவார குண்டர்களால் தகர்க்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டித்தருவோம் என்ற, காங்கிரஸ் மட்டுமல்லாது பல்வேறு மதசார்பற்ற கட்சிகளின் வாக்குறுதிகள் புதைகுழியில் தள்ளப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களை விட முஸ்லிம்கள் மிகவும் பிந்தங்கிய நிலையில் இருப்பதாகவும், மேலும் அவர்களின் பிரதிநிதித்துவம் இதர பிற்படுத்தப்பட்டவர்களை விட குறைவாக உள்ளது என அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மிஸ்ரா கமிசனின் பரிந்துரையான அனைத்து முஸ்லிம்களையும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து மத்திய அரசுப்பணிகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்  என்ற கோரிக்கையை அரசு செவிமடுப்பதாக இல்லை. நாட்டின் மிகப்பெரும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பும் வளர்ச்சியும் மறுக்கப்படும் போது நாம் வளர்ச்சிப் பாதையில் இருக்கிறோம் என்று எவ்வாறு கூறமுடியும்?

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் கைதுகள், சட்டவிரோத காவல் மற்றும் ஊடகங்களின் பொய் பிரச்சாரத்தால் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் சீரழிக்கப்பட்டுள்ளன. நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு சங்கபரிவார்கள் தான் காரணம் என்று விசாரணையில் தெளிவாகிய பின்னரும், அவ்வழக்குகளில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் இன்னும் சிறைகளில் வாடி வருகின்றனர். டெல்லி பாட்லா ஹவுஸ், அஹமதாபாத், மற்றும் ஜம்மு கஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  நடைபெற்ற போலி என்கவுண்டர்கள் முஸ்லிமகள் மத்தியில் ஒரு பீதியை ஏற்படுத்தியுள்ளன.

பத்திரிக்கை தர்மங்களை காற்றில் பறக்கவிட்ட ஊடகங்களாலும் நகர்புற நடுத்தர மக்கள் தனனை சுற்றி நடப்பதை பற்றி கவலைப்படாத நிலையினாலும் காவல்துறையின் அராஜகங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் போன்ர ஏனைய சிறுபான்மையினரும் பல்வேறு இந்துத்துவ தீவிரவாத குழுக்களால் குறிவைக்கப்படுகின்றனர்.  பல்வேறு அரசாங்கத்துறைகளில் பாரபட்சத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். இச்சூழலில் சிறுபான்மையினருக்கு சமூக நீதி எங்கே இருக்கிறது?

ஜாதிமுறை மற்றும் வகுப்புவாதத்தின் அச்சுறுத்தல்கள்:

நமது ஜனநாயகம் பெரும்பாலும், நமது அரசியல் சாசனத்திற்கு எதிரான ஜாதி முறை மற்றும் வகுப்புவாதத்தின் பிடியில் உள்ளன. மனிததன்மையற்ற ஜாதிய முறை நமது நாட்டின் மண்ணின் வைந்தர்களை தீண்டத்தகாதவர்கள் என்றும் ஒதுக்கப்பட்டவர்கள் என்ரும் கூறி நமது கிராமங்களில் இன்றும் அதிகாரம் செலுத்தி வருகிறது. இந்துத்துவவாதிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள  அச்சத்தின் கீழ் முஸ்லிம்களும் ஏனைய சிறுபான்மையினரும்  வாழ்ந்து வருகின்றனர். குஜராத்தில் சங்கபரிவார்கள் நடத்திய இனப்படுகொலை ஏற்படுத்திய காயங்களில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை. அதிகார வர்க்கம்  மற்றும் காவல்துறை  அளித்து  வரும் உதவிகளால் தான் சிறுபான்மயினருக்கு எதிரான கலவரங்கலை இவர்களால் பல்வேறு மாநிலங்களில் நடத்த முடிகிறது.

ஏழை கிராமவாசிகள், தலித்கள் ஆதிவாசிகள் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாழ்வுரிமைக்கெதிரான ஜாதி அடிப்படையிலான ஒரு சமூகத்தை மீண்டும் கொண்டு வருவதில் தான் இந்தியாவின் ஆளும் வர்க்கம் கவனமாக உள்ளது என்பது பலமுறை  நிரூபிக்கப்பட்டுள்ளது.  எனவே தான் இந்நிலையை மாற்ற நாட்டில் ஒடுக்கப்பட்டுள்ள மக்களிடம் அரசியல் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுகிறோம். அனைத்து மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளித்து, அனைவருக்கும் பாதுகாப்பையும் சமத்துவத்தையும் வழங்க்கக்கூடிய ஒரு நேர்மையான அரசியல் மாற்றத்தின் மூலமே சமூக நீதியை அடைய முடியும்.

நீதித்துறையின் வீழ்ச்சி:

நீதித்துறை குடிமக்களின் உரிமை மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய ஜனநாயகத்தின் முக்கியமான ஒரு தூணாகும். வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை பற்றியே அதிகம் கவலைப்படுவதாக நீதித்துறை மாறி வருவதை சமீப காலங்களில் நாம் கண்டுவருகிறோம். ஆனால் நீதிமன்றங்களால் ஜாமீன் மறுக்கப்பட்ட விசாரணை கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இறுதியில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்ட பின் நிவாரணம் கூட வழங்கப்படுவதில்லை. சமீபத்தில் டாக்டர் பினாயக் சென் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பு. அரசாங்கத்துடன் நீதித்துறை  கைகோர்த்துக்கொண்டு மனித உரிமை போராளிகளை எவ்வாறு நசுக்க முடியும்  என்பதற்கு சரியான உதாரணம். நம்பிக்கை மற்றும் கற்பனைகளின் அடிப்படையில்  பாபரி மஸ்ஜிதின் இடத்தை மூன்று வழக்காளிகளுக்கு பிரித்து வழங்கிய விசித்தரமான அலஹாபாத் உயர் நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பு ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கோத்ரா வழக்கில் சங்கபரிவார் பரப்பி வரும் பொய்செய்தியை சிறப்பு நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டிருப்பதும்  நீதித்துறை சரிந்து வருவதற்கான மற்றுமொரு உதாரணம்.

ஊழல் ஒழிப்பு:

பல கோடி ரூபாய் ஊழல்கள் அரசியல் அமைப்பையும் அரசு இயந்திரத்தையும் சிதைத்துள்ளது. சில சக்தியாகிரஹ போராட்டங்கள் மூலமாகவோ அல்லது கடுமையான லோக்பால் சட்டத்தின் மூலமாகவோ இந்த நோயை நாம சரி செய்ய முடியாது. நீதிபதிகளே நேர்மையற்றவர்களாக நாணயமற்றவர்களால செயல்படும் பட்சத்தில் உறுதியான லோக்பால் அமைப்பு மட்டும் ஊழல் இல்லாமல் செயல்படும் என்று நாம் எவ்வாறு நம்ப முடியும்? ஊழலுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்துபவர்கள் ஊழலை விட மோசமான கறை படிந்த வகுப்புவாதத்தை எதனால் அலட்சியம் செய்கின்றனர்? ஊழலுக்கு எதிராக சமீபத்தில் அண்ணா ஹஸாரே நடத்திய போராட்டம், லஞ்சத்தை மிகப்பெரும் தீமையாக சித்தரித்தது. ஆனால் ஊழலின் புதிய பரிணாமங்களை திறந்து விட்ட நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை கண்டுகொள்ளவில்லை.

சுதந்திரத்திற்கு பின்னர் நடத்தப்பட்ட மாபெரும் போராட்டமாக இது கருதப்பட்டு, அரசாங்கமும் இவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தது. ஆனால் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டத்தை எதிர்த்து 11 ஆண்டுகளாக மணிப்பூரில் உண்ணாவிரதம் இருந்து வரும் இராம் சர்மிளாவை அரசாங்கம் கைது செய்கிறது. எதேச்சதிகார ஊடகங்களும் ஊழலுக்கெதிராக களத்தில் நிற்கும் சமூக ஆர்வலர்களும் இவரை கண்டுகொள்வதில்லை.

நமது பாதை:

மேலே குறிப்பிட்ட அனைத்து விஷயங்களும் நமது நாடு இருளை நோக்கி செல்வதை அறிவிக்கிறது. கடுமையான அநீதி இழைக்கப்பட்ட இடத்தில் இருந்துதான் சமூக நீதியை நிலை நாட்ட போராட்டங்களும் இயக்கங்களும் தோன்றியுள்ளன என்பதை வரலாறு பறைசாற்றுகிறது. தன்னை சுற்றி நடக்கும் அநீதிகளை இனம் கண்டு விழித்தெழுந்து போராட்டதை தொடங்க வேண்டியது அனைத்து குடிமக்களின் பொறுப்பாகும்.

சமூக நீதிக்கான போராட்டம் ஏதேனும் ஒரு வாரத்தில் செய்யப்படும் போராட்டமோ அல்லது வார இறுதியில் செய்யபப்டும் போராட்டமோ கிடையாது. இது அனைத்தையும் சரி செய்யும் வரை நடைபெறக்கூடிய நீண்ட போராட்டம்.  தற்போதைய அமைப்பில் அநீதியான முறையில்  பலன்களை அனுபவித்து வருபவர்கள். சமூக நீதிக்கான எந்தவொரு முயற்சியையும் நிச்சயம் எதிர்ப்பார்கள். சமத்துவம் மற்றும் நீதிக்காக போராடும் மக்கள் இயக்கம், எந்தவொரும் சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். தனது போராட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

‌தேசத்தை நீதியால் கட்டமைப்போம்:

நாட்டில் நலிந்த மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயங்களை சக்திபடுத்துவதற்காக தேசிய அளவில்  ஒருங்கிணைந்த கட்டமைப்பை கொண்டு போராடும் ஒரு நவீன சமூக இயக்கம் தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மனித உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும், பல பிரச்சனைகளை கையிலெடுத்து போராடி வருகின்ற நீண்ட வரலாறு பாப்புலர் ஃப்ரண்டிர்கு உண்டு.  இந்த இலட்சிய பாதையில் தேசிய அளவில் சமூக நீதியை  நிலை நாட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக வருகின்ற 2011 நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்கள் டெல்லியில் ராம்லீலா மைதானத்தில்  சமூக நீதி மாநாடு ஒன்றை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்த உள்ளது. சமூக நீதியின் செய்தியை மக்களுக்கு அறிவிப்பதாக இம்மாநாடு அமையும். அத்துடன் நீதி மறுக்கப்பட்ட நமது சக குடிமக்களுக்கு ஆதரவை பெறும் சூழலையும் உருவாக்கும். ஒரே இலட்சியத்திற்காக போராடும் இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் சங்கமமாகவும் இம்மாநாடு அமையும்.

பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய வலிமையான இந்தியாவை உருவாக்க மாநாடு (2007 பெங்களூர்) மற்றும் தேசிய அரசியல் மாநாடு 2009 கோழிக்கோடு)  ஆகியவை ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தன. தேசிய தலைநகரில் நடத்தப்படவுள்ள இந்த சமூக நீதி மாநாடு அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் மக்களை பெருமளவில் கவர்ந்திழுக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. சமூக நீதியை பெறுவதற்கான போராட்டத்தில் நமது பங்களிப்பை செலுத்த வேண்டிய காலம் வந்துள்ளது. நீதிமிக்க தேசத்தை அமைப்பதற்கான முயற்சியில் பாப்புலர் ஃப்ரண்டுடன் கைகோர்த்து நிற்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


வாருங்கள்! நமது தேசத்தை நீதியால் கட்டமைப்போம்!