வாஷிங்டன் : ரஷ்யாவின் பிரபல ஓவியர் வாஸிலி வாஸிலியேவிச் வரைந்த டெல்லி மோத்தி மஸ்ஜிதின் பிரபலமான பிரம்மாண்ட ஓவியம் 31 லட்சம் டாலருக்கு ஏலத்தில் விற்றது.ஏறத்தாழ 13 அடி உயரமும், 16 அடிவீதியும் கொண்ட இந்த ஓவியம் பிரபல ஏல நிறுவனமான ஸோதபி விற்பனைச்செய்துள்ளது.
19-ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் மிகவும் புகழ்பெற்ற கலைஞராக விளங்கினார் வாஸிலியேவிச்.1847-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகைத்தந்த வாஸிலியேவிச் மோத்தி மஸ்ஜிதை தூரிகையால் வரைந்தார்.