நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 3 நவம்பர், 2011

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றக்க்கூடாது - கேம்பஸ் ஃப்ரண்ட் வலியுறுத்தல்

சென்னை கோட்டூர்புரத்தில் செயலபட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை டி.பி.ஐ வளாகத்திற்கு மாற்றுவது என்ற தமிழக அமைச்சரவையின் முடிவை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.


கடந்த ஆட்சியில் ரூபாய் 180 கோடி மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டு பல்வேறு நவீன வசதியுடன் "அண்ணா நூற்றாண்டு நூலகம்" கட்டப்பட்டது. தமிழ் அறிஞர்கள், நற்சிந்தனையாளர்கள், மாணவர்கள் என பலரும் தங்களிடம் இருந்த அறிய பல படைப்புகளையும், நூல்களையும் கொடுத்து உருவாக்கப்பட்ட இம்மாபெரும் நூலகம் உலகோரின் கவனத்தை ஈர்த்தது.

பள்ளி மாணவர்கள் முதல் ஆராய்ச்சி மாணவர்கள் வரை பலதரப்பட்ட தமிழக மாணவர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் பயன் தந்த நவீன வசதிகள் கொண்ட நூலகத்தை டி.பி.ஐ வளாகத்திற்கு மாற்றுவது என்ற தமிழக அமைச்சரவையின் முடிவு கண்டிக்கத்தக்கது.

மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் உளத்திற்கு ஆரோக்கியத்தை தரும் விதமாக‌ செயல்பட்டு வரும் இந்நூலகத்தை மாற்றும் முடிவை தமிழக அமைச்சரவை திரும்பப்பெற வேண்டும் என கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்துகிறது