நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 3 நவம்பர், 2011

ஃபலஸ்தீன்:யுனெஸ்கோவிற்கான நிதியை கனடாவும் நிறுத்தியது



hi-584-UNESCO-01537467
டொராண்டோ  :ஃபலஸ்தீனுக்கு பூரண உறுப்பினர் பதவி வழங்கிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நாவின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவிற்கு வழங்கி வந்த ஒரு கோடி டாலர் உதவித்தொகையை கனடா முடக்கியுள்ளது.


மேற்காசியாவின் சமாதான முயற்சிகளுக்கு ஃபலஸ்தீனுக்கு யுனெஸ்கோ உறுப்பினர் பதவியை வழங்கியது பாதிப்பை ஏற்படுத்துமாம்-கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பைட் கூறுகிறார். எதிர்காலத்தில் எவ்வித நிதியுதவியையும் கனடா யுனெஸ்கோவிற்கு அளிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவெ ஃபலஸ்தீனுக்கு யுனெஸ்கோ உறுப்பினர் பதவியை வழங்கியதை கண்டித்து அமெரிக்காவும் தனது ஆறு கோடி டாலர் நிதியுதவியை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.