இஸ்லாமாபாத் : மின்தட்டுப்பாட்டால் அவதிப்படும் பாகிஸ்தான், இந்தியாவிடம் இருந்து 500 முதல் 1000 மெகாவாட் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று, பிரதமர் கிலானி கூறியதாக பத்திரிக்கைகள் தெரிவிகிக்கின்றன.
18,000 மெகாவாட் தேவை இருக்கும் நிலையில், 13,250 மெகாவாட் உற்பத்தி செய்து, 5,000 மெகாவாட் பற்றாக்குறையில் உள்ளது பாகிஸ்தான். மின் பற்றாக்குறையால் நாடெங்கும் போராட்டங்கள் வலுத்து வருகின்றது.
பொறுப்பேற்று பதில்சொல்லும் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவும், தேசிய அமைப்புகள் ஊழலற்று விளங்க ஏற்பாடுகள் செய்யப்ப்படும் என்றார்.